கேமரன் டியாஸ்
கேமரன் டயஸ் | |
---|---|
பிறப்பு | கேமரன் மிசேல் டயஸ் ஆகத்து 30, 1972 சான் டியேகோ, கலிபோர்னியா, அமெரிக்கா |
பணி | நடிகை, மாடல் |
செயற்பாட்டுக் காலம் | 1988–1993 (மாடல்) 1994–அறிமுகம் (நடிகை) |
கேமரன் டயஸ் (Cameron Michelle Diaz, பிறப்பு: ஆகத்து 30, 1972) ஒரு பிரபல்யமான அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் விளம்பரநடிகை ஆவார். இவர் 1990ம் ஆண்டு தி மாஸ்க் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவர் திரைப்படத் துறைக்கு அறிமுகம் ஆவதற்கு முன் பல விளம்பரத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது தி அதர் வுமன், மற்றும் செக்ஸ் டேப் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]கேமரன் டயஸ் சான் டியேகோ, கலிபோர்னியாவில் பிறந்தார். இவரின் தயார் பில்லி ஜோன் மற்றும் தந்தை எமிலியோ லூயிஸ் டயஸ். இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு, அவரின் பெயர் சிமேனே. டயஸ் கலிபோர்னியாவின் லாங் பீச்சில் நகரில் வளர்ந்தார், லாங் பீச்சில் பாலிடெக்னி உயர்நிலை பள்ளியில் கல்வி பயின்றார்.
ஆரம்ப தொழில்
[தொகு]இவர் தனது 16 வயதில் ஒரு விளம்பர நடிகையாக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். இவர் தனது 21வது வயதில் தி மாஸ்க் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்தத் திரைப்படத்திற்கு ஒரு முக்கிய பெண் நடிகை தேடி கொண்டிருந்த போது, எலைட் என்பவரால் தயாரிப்பாளரிடம் கேமரன் டயஸ் பரிந்துரை செய்யப்பட்டார். இந்தத் திரைப்படம் 1994ம் ஆண்டு முதல் 10 அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றானது. அதை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார்.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1994 | தி மாஸ்க் | டினா கார்லெயல் | |
1995 | த லாஸ்ட் சப்பர் | ஜூட் | |
1996 | சீ இசு தி ஒன் | ஹீத்தர் டேவிஸ் | |
1996 | லிங் மின்னேசொடா | பிரட்டி கிளேட்டன் | |
1996 | ஹெட் அபோவே வாட்டர் | நத்தாலி | |
1997 | டுல்சா டு கீஸ் | ட்ரூடி | |
1997 | மை பெஸ்ட் பிரண்ட்ஸ் வெட்டிங் | கிம்மி வாலஸ் | |
1997 | ஏ லைஃப் லெஸ் ஆர்டினரி | செலினே நவிலலே | |
1998 | பியர் அண்ட் லோதிங்க் இன் லாசு வேகாசு | தொலைக்காட்சி நிருபர் | |
1998 | தேர் இசு சம்திங்க் அபோட் மேரி | மேரி ஜென்சன் | |
1998 | வெரி பேட் திங்க்ஸ் | லாரா கர்ரேட்டி | |
1999 | மேன் உமன் பிலிம் | செலிபிரிட்டி | குணச்சித்திரவேடம் |
1999 | பீயிங்க் சான் மால்கோவிச் | லோட்டே ஸ்க்வார்ட்ஸ் | |
1999 | எனி கிவேன் சண்டே | கிறிஸ்டினா பக்னியாச்சி | |
2000 | திங்க்சு யூ கேன் டெல் சசுட் பை லுக்கிங்க் அட் ஹெர் | கரோல் பேபர் | |
2000 | சார்லி'ஸ் ஏஞ்சல்ஸ் | நடாலி குக் | |
2001 | தி இன்விசிபிள் சர்கஸ் | பைத் | |
2001 | ஷெர்க் | இளவரசி பியோனா | குரல் |
2001 | வெண்ணிலா ஸ்கை | ஜூலி கியானி | |
2002 | தி இசுவீட்டசட்டு திங்க் | கிறிஸ்டினா வால்டர்ஸ் | |
2002 | கேங்க்ஸ் ஆஃப் நியூயார்க் | ஜென்னி எவர்டீனே | |
2003 | சார்லி'ஸ் ஏஞ்சல்ஸ்: ஃபுல் திராட்டில் | நடாலி குக் | |
2004 | ஷெர்க் 2 | இளவரசி பியோனா | குரல் |
2005 | இன் ஹெர் சூஸ் | மக்கி பில்லேர் | |
2006 | தி ஹொலிடே | அமண்டா வூட்ஸ் | |
2007 | ஷெர்க் த தேர்ட் | இளவரசி பியோனா | குரல் |
2007 | ஷெர்க் த ஹால்ஸ் | இளவரசி பியோனா | குரல் |
2008 | வாட் ஹேப்பன்சு இன் வேகாஸ் | ஜாய் மெக்நாலி | |
2009 | மை சிஸ்டர்'ஸ் கீப்பர் | சாரா பிட்ஸ் | |
2009 | த பாக்ஸ் | நோர்மா லூயிஸ் | |
2010 | ஷெர்க் ஃபாரெவர் ஆப்டர் | இளவரசி பியோனா | குரல் |
2010 | இசுக்கேர்டு செரக்லெசு | இளவரசி பியோனா | குரல் |
2010 | நைட் அண்ட் டே | சூன் கேவன்சு | |
2011 | த கிரீன் ஹார்னெட் | ||
2011 | பாட் டீச்சர் | எலிசபெத் ஆல்சே | |
2012 | வாட் டூ எக்சுபெக்ட் வென் யூஆர் எக்சுபெக்டிங்க் | ஜூல்ஸ் | |
2012 | கம்பிட் | PJ Puznowski | |
2012 | எ லையர்'சு ஆட்டோபயோகிராபி | சிக்மண்ட் பிராய்ட் | |
2013 | தி கவுன்செலோர் | மல்கினா | |
2014 | தி அதர் வுமன் | கார்லி | |
2014 | செக்ஸ் டேப் | அன்னி | தயாரிப்பில் |
2014 | அன்னி | மிஸ் ஹன்னிகன் | தயாரிப்பில் |
சின்னத்திரை
[தொகு]ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1998 | சேட்டர்டே நைட் லைவ் | சொந்த வேடம் | |
2002 | சேட்டர்டே நைட் லைவ் | சொந்த வேடம் | |
2005 | சேட்டர்டே நைட் லைவ் | சொந்த வேடம் | |
2005 | டிரிப்பின் | சொந்த வேடம் | ஆவணப்படம் |
2006 | சேட்டர்டே நைட் லைவ் | சொந்த வேடம் | சிறப்புத் தோற்றம் |
2008–2009 | சேட்டர்டே நைட் லைவ் | கிகி டீமோர் | 3 அத்தியாயங்கள் |
2009 | சீசேம் இசுட்ரீட் | சொந்த வேடம் | |
2010 | டாப் கியர் | சொந்த வேடம் | |
2011 | எக்ஸ் பேக்டர் | சொந்த வேடம் | விருந்தினர் நீதிபதி |
2013 | சேட்டர்டே நைட் லைவ் | சொந்த வேடம் | அத்தியாயம்: ஆடம் லெவின்/கென்ட்ரிக் லாமர் |
2014 | பேட் டீச்சர் | உற்பத்தியாளர் |