கன்சோவு
கன்சோவு
赣州市 | |
---|---|
மாவட்டநிலை நகரம் | |
ஜியாங்க்ஷி எல்லைக்குள் கன்சோவு நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 25°52′N 114°56′E / 25.867°N 114.933°E | |
Country | சீனா |
மாகாணம் | ஜியாங்க்ஷி |
வசிப்பிடம் | கி. பி. 236 |
அரசு | |
• மேயர் (துணை) | ஜெங் வென்மிங் |
• செயலாளர் | லி பிங்ஜுன் |
பரப்பளவு | |
• மாவட்டநிலை நகரம் | 39,379.64 km2 (15,204.56 sq mi) |
• நகர்ப்புறம் (2018)[1] | 324 km2 (125 sq mi) |
• மாநகரம் | 5,316.8 km2 (2,052.8 sq mi) |
ஏற்றம் | 107 m (351 ft) |
மக்கள்தொகை (2010 census[2]) | |
• மாவட்டநிலை நகரம் | 83,68,447 |
• நகர்ப்புறம் (2018)[3] | 15,85,000 |
• பெருநகர் | 19,77,253 |
நேர வலயம் | ஒசநே+8 (சீன நேரம்) |
அஞ்சல் எண் | 341000 |
இடக் குறியீடு | 0797 |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-JX-07 |
ஜீடீபி | 2011 |
- Total | CNY 133.598 பில்லியன் US$ 21.009 பில்லியன் |
- தனி நபர் வருமானம் | CNY 14,910 US$ 2,345 |
- வளர்ச்சி | 12.5% |
வாகன பதிவு தட்டு முன்னொட்டு | 赣B |
நிர்வாகப் பிரிவுக் குறியீடு | 360700 |
இணையதளம் | ganzhou |
கன்சோவு (எளிய சீனம்: 赣州; பின்யின்: Gànzhōu) அல்லது கன்சோவ் என்பது சீனாவின் தெற்கு ஜியாங்க்ஷியில் உள்ள ஒரு மாவட்டநிலை நகரம் ஆகும். இதன் கிழக்கில் ஃபுஜியான், தெற்கில் குவாங்டோங், மேற்கில் ஹுனான் ஆகியவை எல்லைகளாக உள்ளன. இதை ஆளும் பகுதி ஜங்கோங் மாவட்டத்தில் உள்ளது. 2010ல் இதன் மக்கள்தொகை 8,361,447 ஆகும். அதில் 1,977,253 மக்கள் மெட்ரோவில் உள்ளனர்.
வரலாறு
[தொகு]201ல் ஹான் பேரரசர் கவோசு தற்கால கன்சோவின் எல்லைக்குள் ஒரு கவுன்டியை நிறுவினார். அந்த ஆரம்பகால வருடங்களில் அப்பகுதியில் ஹான் சீனர்களின் வசிப்பிடம் மற்றும் அதிகாரமானது பெரும்பாலும் கான் ஆற்றுப்படுகைக்கு உள்ளே அமைந்திருந்தது. இந்த ஆறு போயங் ஏரி மூலமாக யாங்சே ஆற்றுக்குத் துணை ஆறாக உள்ளது. வடக்குப் பகுதியில் இருந்து தகவல் தொடர்பு வர பயன்படுத்தப்பட்டுள்ளது. அரிசி விவசாயத்திற்கு பாசன வசதி கொடுத்துள்ளது.
சுயி அரசமரபின் காலத்தில் கவுன்டி அதிகாரமானது ப்ரிபெக்சர் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. மேலும் இப்பகுதி கியான்சோவு என்று அழைக்கப்பட்டது.(虔州). சாங் அரசமரபின் ஆட்சிக்காலத்தில் வடக்குப் பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து உள்ளூர் மக்கள்தொகை அதிகரித்தது. இதன் காரணமாக உள்ளூர் பழங்குடியினர் மலைப் பகுதிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. 1126ல் ஜிங்கங் நிகழ்வில் தலைநகரமானது ஜின் அரசமரபால் வெல்லப்பட்டது. இதனால் மக்கள் இடம்பெயர்வது மேலும் அதிகரித்தது.
இந்த மாகாணத்தின் பெயரானது கன்சோவு என்று தெற்கு சாங் ஆட்சியில் (1127–1279) அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டது.
பிந்தைய 1800களில் கன்சோவு ஒரு தெற்கு ஒப்பந்தத் துறைமுகமாகத் திறக்கப்பட்டது. அயல் நாட்டு நிறுவனங்களுக்கு ஒரு சிறு தளமாக அமைந்தது. 1929 மற்றும் 1934க்கு இடையில் கன்சோவு சீனப் பொதுவுடமைக் கட்சியின் தளமான ஜியாங்க்ஷி-ஃபுஜியான் சோவியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சிவப்புத் தலைநகரமான ருயிஜினின் அருகில் இருந்ததால் கன்சோவு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான குவோமின்டங் சுற்றிவளைப்புப் பிரச்சாரங்களுக்கு ஆளானது.
1939 மற்றும் 1945க்கு இடையில் சியாங் சிங்-குவோ சீனக் குடியரசு அரசாங்கத்தால் கன்னன் ப்ரிபெக்சரின் ஆணையராக நியமிக்கப்பட்டார். கன்னன் ப்ரிபெக்சர் (贛南) என்பது கன்சோவைச் சுற்றியிருந்த பகுதிகளின் அப்போதைய பெயராகும். அங்கு அவர் புகைபிடித்தல் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றை தடைசெய்தார். அரசாங்க மேலாண்மையை ஆய்வு செய்தார். பொருளாதார விரிவு மற்றும் சமூகக் கண்ணோட்டம் மாற வழிவகுத்தார். இவரது செயல்கள் சீன அரசியல் போரின் ஒரு அதிசயமாகப் போற்றப்பட்டன. இது அந்நேரத்தில் "கன்னன் புது ஒப்பந்தம்" (贛南新政) எனப்பட்டது. கன்னனில் இவர் இருந்த நேரத்தில் 1940 முதல் "பொது தகவல் மேசை" என்ற ஒன்றை ஏற்படுத்தினார். அங்கு பொதுமக்கள் தங்களுக்கு ஏதும் பிரச்சினைகள் இருந்தால் இவரை சந்திக்க முடியும். பதிவுகளின்படி சியாங் சிங்-குவோ மொத்தமாக 1,023 பேரை 1942ல் இந்த சந்திப்புகளின் போது சந்தித்தார். போரின் காரணமாக கன்சோவில் ஏராளமான அகதிகள் இருந்ததால் ஆயிரக்கணக்கானோர் தெருவில் வாழ்ந்தனர். ஜூன் 1942ல் சியாங் சிங்-குவோ அதிகாரபூர்வமாக சீன குழந்தைகள் கிராமத்தை (中華兒童新村) கன்சோவின் வெளிப்பகுதியில் அமைத்தார். அக்கிராமத்தில் நர்சரி, மழலையர் பள்ளி, ஆரம்பப் பள்ளி, மருத்துவமனை மற்றும் உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை இருந்தன.
உசாத்துணை
[தொகு]- ↑ Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition (PDF). St. Louis: Demographia. p. 24.
- ↑ http://www.citypopulation.de/php/china-jiangxi-admin.php
- ↑ Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition (PDF). St. Louis: Demographia. p. 24.