உள்ளடக்கத்துக்குச் செல்

ஐட்டம் 47

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐட்டம் 47
இயக்கம்லூயிஸ் டி'எஸ்போசிட்டோ
தயாரிப்புகேவின் பிகே
மூலக்கதை
ஷீல்ட்
படைத்தவர்
திரைக்கதைஎரிக் பியர்சன்
இசைகிறிஸ்டோபர் லெனெர்ட்ஸ்
நடிப்பு
  • லிஸி கப்லன்
  • ஜெஸ்ஸி பிராட்போர்டு
  • மாக்சிமிலியானோ ஹெர்னாண்டஸ்
  • டைட்டஸ் வெலிவர்
ஒளிப்பதிவுகேப்ரியல் பெரிஸ்டைன்
கலையகம்மார்வெல் இசுடியோசு
விநியோகம்வால்ட் டிஸ்னி இசுடியோசு ஹோம் என்டர்டெயின்மென்டு
வெளியீடுசெப்டம்பர் 25, 2012 (2012-09-25)
ஓட்டம்12 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

ஐட்டம் 47 (ஆங்கில மொழி: Item 47) என்பது மார்வெல் வரைகதை அமைப்பான ஷீல்ட் என்ற வரைகதையை மையமாகக் கொண்டு 2012 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு நேரடி-காணொளி குறும்படம் ஆகும்.[1] இந்த படத்தை மார்வெல் இசுடியோசு நிறுவனம் தயாரிக்க, வால்ட் டிஸ்னி இசுடியோசு ஹோம் என்டர்டெயின்மென்டு மூலம் மார்வெல் தி அவேஞ்சர்ஸின் முகப்பு ஊடக வெளியீட்டில் விநியோகிக்கப்பட்டது.

இது தி அவேஞ்சர்ஸ் திரைப்படத்தின் வழித்தொடராகவும் மார்வெல் ஒன்-சாட்சு குறும்படத் தொடரின் மூன்றாவது படமும் ஆகும். இத்திரைப்படம் லூயிஸ் டி'எஸ்போசிட்டோ என்பவர் இயக்கத்தில் எரிக் பியர்சனின் திரைக்கதையில், மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டு அதன் தொடர்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறது. இதில் லிஸி கேப்லான், ஜெஸ்ஸி பிராட்ஃபோர்ட், மாக்சிமிலியானோ ஹெர்னாண்டஸ் மற்றும் டைட்டஸ் வெலிவர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இது செப்டம்பர் 2013 இல் ஒளிபரப்பத் தொடங்கிய ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட்[2] என்ற தொலைக்காட்சித் தொடரை வழித்தொடர் செய்ய ஏபிசிக்கு இந்த குறும்படம் உதவியது.

கதைச் சுருக்கம்

[தொகு]

இது பென்னி மற்றும் கிளாரி என்ற அதிர்ஷ்டத் தம்பதிகள், தி அவேஞ்சர்ஸ் படத்தில் நியூயார்க் நகரத்தின் மீதான தாக்குதலில் எஞ்சியிருந்த சிட்டாரி துப்பாக்கியை (ஐட்டம் 47) கண்டுபிடித்தனர். இதன் மூலன் தம்பதியினர் சில வங்கிகளில் கொள்ளையடிக்க இதைப் பயன்படுத்துகிறார்கள், இதனால் ஷீல்ட் இன் கவனத்தை ஈர்க்கிறார்கள், அவர்களிடமிருந்து அந்த ஆயுதத்தை மீட்டெடுக்கவும் தம்பதியரை கட்டுப்படுத்தவும் முகவர்களான ஜாஸ்பர் சிட்வெல் மற்றும் பெலிக்ஸ் பிளேக் ஆகியோரை நியமிக்கிறது. அவர்கள் மூலம் எப்படி துப்பாக்கி மீட்டெடுக்கப்பட்டது மற்றும் அந்த தம்பதிகளைக் கொல்வதற்குப் பதிலாக, அவர்களை ஷீல்ட் இல் சேர அழைக்கிறார், சிட்டாரி தொழில்நுட்பத்தில் பணி செய்ய பென்னியை நியமிக்கப்பட்டார், மேலும் கிளேர் பிளேக்கின் உதவியாளராக ஆனார்.

நடிகர்கள்

[தொகு]
  • லிஸி கப்லன் - கிளாரி வைஸ்
  • ஜெஸ்ஸி பிராட்போர்டு - பென்னி பொல்லாக்
  • மாக்சிமிலியானோ ஹெர்னாண்டஸ் - ஜாஸ்பர் சிட்வெல்
  • டைட்டஸ் வெலிவர் - பெலிக்ஸ் பிளேக்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Breznican, Anthony (July 11, 2013). "'Marvel One-Shot: Agent Carter' – First Look at poster and three photos from the new short!". Entertainment Weekly. Archived from the original on April 19, 2014. பார்க்கப்பட்ட நாள் April 19, 2014.
  2. Marvel Studios: Assembling a Universe. Marvel's Agents of S.H.I.E.L.D.: The Complete First Season Home media, bonus material: ABC Home Entertainment. 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐட்டம்_47&oldid=3321474" இலிருந்து மீள்விக்கப்பட்டது