ஏரில்
பொய்க்கனி (Aril) அல்லது போலிப் பொய்க்கனி (Arillode) விதையைப் பகுதியளவு அல்லது முழுமையாக மூடியிருக்கும் சிறப்பான வெளிவளரி ஆகும். போலிப் பொய்க்கனிகள் சில சமயங்களில் வேறுபட்டவை. இருப்பினும் பொய்க்கனி சூற்பையில் விதை (சூற்காம்பு அல்லது விதைமுளை) ஒட்டியுள்ள இடத்தில் வளருகிறது, போலிப் பொய்க்கனி விதை உறையின் மற்ற பகுதிகளிலிருந்து வளருகிறது.[2]. சில சமயங்களில் "பொய்க்கனி" என்ற சொல் பூக்கும் தாவரங்களில் உள்ள விதைகளில் காணப்படும் சதைப்பற்றுள்ள வளரிகளையும் குறிக்க பயன்படுகிறது, சாதிக்காய் விதையும் இதைப் போன்றது.[3]. பொய்க்கனியும் போலிப் பொய்க்கனியும் பெரும்பாலும் உண்ணக்கூடிய பொருளாக விளங்குவதால், விலங்குகள் மூலம் விதைப்பரவுதல் நடைபெறவும் ஏதுவாக உள்ளது.[4]. போலிப்பொய்க்கனிகளும் பொய்க்கனி போன்ற உருவமே பெற்றுள்ளன, இவை பொதுவாக ஃபர்சிரேசி இனத்தாவரங்களின் பைரின்களில் காணப்படுவதோடு சூற்பையின் இடையடுக்கிலிருந்து வளரக்கூடியது.[5] - இந்த சதைப்பற்றுள்ள, உண்ணக்கூடிய பெரிகார்ஃப் ஆனது இரண்டு பகுதிகளாக பிளவுற்று, பின் தொலைவாக விழுகிறது அல்லது கறுப்பு நிற விதைகளைச் சுற்றிலும் ஒரு வெளிர் நிறமுள்ள சாப்பிடும் பொய்க்கனி வெளிப்படுகிறது.
விதைசூழ் சதை அல்லதுபொய்க்கனி பழம் போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இந்த பொய்க்கனி பெரும்பாலும் பூக்கும் தாவர இனங்களில் காணப்படுகிறது. லாங்கன், லிட்சி மற்றும் அக்கீன் வகை பழங்களில் விதையை சுற்றி உள்ள மேலுறை அடுக்கிற்குப் பதிலாக சதைப்பற்றுள்ள உண்ணக்கூடியப் பகுதியாக நன்கு வளர்ச்சியடைந்த பொய்க்கனிப் பகுதி உள்ளது. இத்தகைய பொய்க்கனிகள் சில வித்திலைத் தாவரச் சிற்றினங்களில் காணப்படுகிறது. குறிப்பாக, ஈயூவ் போன்ற இல்லிகியூவ், காகிகட்டே கூம்பு வகைத் தாவரங்களில் காணப்படுகிறது. பெரும்பான்மையான வித்திலைத் தாவர மரங்களில் கூம்புவகையாகவும், ஈயூவின் இனப்பெருக்க அமைப்பில் ஒற்றை விதையை மூடிய குடுவை போன்ற சதைப்பற்றுடைய அமைப்பாகவும் உள்ளது. இத்தகைய மூடிய அமைப்பு நன்கு வளர்ச்சியடைந்த கூம்பு செதில்களால் ஆனது.
டாக்சசு மரப் பொய்க்கனி வளர்ச்சி
[தொகு]கீழே கொடுக்கப்பட்டுள்ள யூரோப்பியன் ஈயூவ் (டாக்சசு பேக்காட்டா) படத்தில், பொய்க்கனி முதலில் சிறியதாகவும், விதையின் அடிபாகத்தில் பச்சை நிற பட்டைகளுடனும், பின் பழுப்பு நிறமாகவும் அதிலிருந்து சிவப்பு நிறமாகவும் விரிவடைந்து, விதை முதிர்ச்சி அடையும்போது அதனைச் சுற்றிலும் சதைப்பற்றுடைய சிவப்பு நிற உறைப்போன்று அமைகிறது. இந்தப் பொய்க்கனி பறவைகளை பழம் உண்ண கவரக்கூடிய வண்ணங்களையும், நச்சுத் தன்மையற்றதாகவும் (ஈயூவின் மற்ற பாகங்கள் நச்சுத்தன்மை உடையது) காணப்படுகிறது. இதனால் பறவைகள் பழங்களில் உள்ள பொய்க்கனிச் சதைப் பகுதிகளை செரித்துவிட்டு அதன் விதைகளை எச்சங்களாக வெளியேற்றுவதால், ஈயூவின் விதைகள் பறவைகள் மூலமாக பரவுவதற்கு ஏதுவாக அமைகிறது.
டாக்ரைகார்பசு டாக்ரைடியாயிடசு மரப் பொய்க்கனி
[தொகு]காகிகட்டே மரம், டாக்ரைகார்பசு டாக்ரைடியாய்டசு மரம் போன்றவை நியூசிலாந்து நாட்டை தாயகமாக கொண்டவை. முன் ஐரோப்பிய காலங்களில் காகிகட்டே தாவர விதைசூழ் சதை மாவோரிக்கு உணவு வளமாக இருந்தது. கழுவிய ஏரில்கள் கொரோயி என்று அழைக்கப்படுவதுடன் சமைக்காமல் உண்பதற்கும் பயன்படுகிறது.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Banerji, I.; Chaudhuri, K.L. (1944), "A contribution to the life history of Litchi chinensis Sonn.", Proceedings of the Indian Academy of Sciences - Section B, 19 (2): 19–27
- ↑ Beentje, H.; Williamson, J. (2010), The Kew Plant Glossary: an Illustrated Dictionary of Plant Terms, Royal Botanic Gardens, Kew: Kew Publishing
- ↑ Endress, P.K. (1973). "Arils And Aril-Like Structures In Woody Ranales". New Phytologist 72 (5): 1159–1171. doi:10.1111/j.1469-8137.1973.tb02092.x. http://dx.doi.org/10.1111/j.1469-8137.1973.tb02092.x.
- ↑ "Fruit and Seed Production". google.com.
- ↑ Ramos-Ordonez, M. F.; Arizmendi, M. D. C.; Marquez-Guzman, J. (2012). "The fruit of Bursera: Structure, maturation and parthenocarpy". AoB Plants 2012: pls027. doi:10.1093/aobpla/pls027. பப்மெட்:23115709.
- ↑ "Dacrycarpus dacrydioides (kahikatea) description". conifers.org. 2011. பார்க்கப்பட்ட நாள் 10 September 2011.
'The small fruit (koroi) are superabundant and highly nutritious. The birds ate them and flocked for miles to do so.
- ↑ "Kahikatea, Dacrycarpus". web.auckland.ac.nz. 2011. Archived from the original on 12 January 2012. பார்க்கப்பட்ட நாள் 10 September 2011.
The juicy, swollen, red stalk which holds the seed is known as koroi.
மேலும் படிக்க
[தொகு]- Anderson, E. & Owens, J. N. (2003). Analysing the reproductive biology of Taxus: should it be included in Coniferales? Acta Hort. 615: 233–234.