உள்ளடக்கத்துக்குச் செல்

எம். டி. ஆர் தொடருந்துச் சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Mass Transit Railway (MTR)
எம்.டி.ஆர். தொடருந்து சேவை
தகவல்
அமைவிடம்ஹொங்கொங்
போக்குவரத்து
வகை
  • துரிதக்கதி மின் தொடருந்து
  • இலகு தொடருந்து
மொத்தப் பாதைகள்
  • துரிதக்கதி தொடருந்து இடைமாற்றகங்கள்: 10
  • இலகு தொடருந்து இடைமாற்றகங்கள்: 11
நிலையங்களின்
எண்ணிக்கை
  • துரிதகதி தொடருந்து நிறுத்தகங்கள்: 95
  • இலகு தொடருந்து நிறுத்தகங்கள்: 68
பயணியர் (ஒரு நாளைக்கு)
  • துரிதகதிப்பயணம்:
    4.962 மில்லியன்
  • ஏனையவை:
    0.702 மில்லியன்
(மே 2020)[1]
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
  • 30 செப்டம்பர் 1979 முதல் ஆரம்பம்
  • 2 டிசம்பர் 2007 (கே.சி.ஆர் இணைப்பு)
இயக்குனர்(கள்)எம்.டி.ஆர் கூட்டுத்தாபனம்
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்
  • துரிதகதி தொடருந்து: 175 கிமீ
  • இலகு தொடருந்து: 36.2 கிமீ[2]
இருப்புபாதை அகலம்1,432 mm (near standard gauge) &
1,435 mm (standard gauge)

எம்.டி.ஆர் தொடருந்துச் சேவை (Mass Transit Railway MTR) என்பது ஹொங்கொங்கின் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றான துரிதகதி இடைமாறும் தொடருந்து சேவையாகும். இது முற்றிலும் நவீன வசதிகளுடன் கூடிய நிலத்தடியில் ஓடும் தொடருந்தாகும். இது ஆங்கில எம்.டி.ஆர் எனும் மூன்று எழு்த்துக்களி்னால் (பெயராக) பிரபலமானது. இது பிரித்தானியாவில் ஓடும் நிலத்தடி டியூப் தொடருந்து வகையைச் சேர்ந்தாகும். இது உலக பொதுப் போக்குவரத்து வசதிகளில் மிகவும் வளர்ச்சி அடைந்த சேவைகளில் ஒன்றாகும். இது ஹொங்கொங்கின் இன்னுமொரு துரிதகதி தொடருந்து சேவையான கவுலூன்-குவாங்சோவ் தொடருந்துச் சேவையை 2007 டிசம்பர் 2 ஆம் நாள் தன்னகத்தே இணைத்துக்கொண்டது. இது தற்போது 211.6 கிலோமீட்டர் நீள அளவிலான தண்டவாளங்களைக் கொண்ட தொடருந்து வலைப்பின்னல் சேவையாக பரிணமித்துள்ளது. மொத்தம் 150 நிறுத்தகங்களைக் கொண்டுள்ளது. அதில் 82 துரிதகதி தொடருந்து நிறுத்தகங்களும், 68 இலகுத் தொடருந்து நிறுத்தகங்களையும் கொண்டுள்ளது. இதன் போக்குவரத்துக்கு ஒக்டோப்பஸ் செலவட்டை தாணியங்கி மின்னணு பணம் செலுத்தி முறையைக் கொண்டுள்ளது.

எம்.டி.ஆர் தொடருந்து வரலாறு

[தொகு]
1970 தீர்மானிக்கப்பட்ட முதல் நான்கு வழி நிர்மானத் திட்டம்

இது 1979 ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1960 ஆம் ஆண்டுகளில் வாகன நெரிசல் அதிகரிப்பால் இதற்கான தீர்வினை அப்போது ஆட்சியில் இருந்த கொமிசனரால் கலந்தாலோசிக்கப்பட்டது. அதாவது வாகன நெரிசல் அதிகரிப்பு, மக்கள் சனநெருக்கம் அதிப்பு, பயண தாமதம் போன்றன பெரும் சிக்கலை உருவாக்கின. இதனால் நகரப் பணிகளிலும் சில இடையூறுகள் தோன்றின.1960 ஆம் ஆண்டுகளில் வாகன நெரிசல் அதிகரிப்பால் இதற்கான தீர்வினை அப்போது ஆட்சியில் இருந்த பிரித்தானிய கொமிசனரால் கலந்தாலோசிக்கப்பட்டது. அதாவது வாகன நெரிசல் அதிகரிப்பு, மக்கள் சனநெருக்கம் அதிப்பு, பயண தாமதம் போன்றன பெரும் சிக்கலை உருவாக்கின. இதனால் நகரப் பணிகளிலும் சில இடையூறுகள் தோன்றின. ஹொங்கொங்கின் படு வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு இப்போக்குவரத்து நெரிசலுக்கான உடனடி தீர்வு தேவையானது. எனவே இது தொடர்பில் பிரித்தானிய போக்குவரத்து ஆலோசகர்களான ப்ரீமென், பொக்ஸ்,வில்பர் ஸ்மித் அண்ட் துறையினருடம் ஹொங்கொங் போக்குவரத்து நிர்மானம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதன் திட்டப்படி ஹொங்கொங் மக்கள் தொகை அதிகரிப்பு வேகத்தையும் கருத்தில் கொண்டு 1986 ஆம் ஆண்டளவில் 6,868,000 மக்கள் தொகை அதிகரிக்கும் என்றும் தீர்மானித்தனர். அதற்கு ஏற்றவாறு போக்குவரத்து அமைய வேண்டும் எனவும் தீர்மானித்தனர். இத் தீர்மான அறிக்கையை 1967 செப்டம்பர் 1 ஆம் நாள் ஹொங்கொங் அரசிடம் கையளிக்கப்பட்டது. அதன் படியான 40 மைல் (64 கிலோ மீட்டர்) துரிதகதி இடைமாறும் தொடரூந்து வலைப்பின்னலை சேவை முதலில் நான்கு நிலத்தடி வழிகளை, ஆறு கட்டங்களாக செய்து முடிக்க முடிவெடுக்கப்பட்டது.

  • குந் டொன்ங் வழி பாதை (வெஸ்டர்ன் மார்க்கெட் இலிருந்து மா யாவ் டொங் வரை)
  • சுன் வான் வழி பாதை(எட்மிரால்டி இலிருந்து சுன் வான் வரை)
  • ஹொங்கொங் தீவு வழி பாதை (கென்னடி டவுன் இலிருந்து சை வான் வரை)
  • சாட்டின் வழி பாதை (சிம் சா சுயி இலிருந்து வூ லுய் வரை)

இக் கலந்தோசனையின் பின்பு 1967 ம் ஆண்டு ஓர் தீர்மானம் எட்டப்பட்டது. அதாவது நிலத்தடி தொடருந்து சேவையை நிர்மானிப்பதற்கான தீர்மானமே அது. அதன் படி 1970 ஆம் ஆண்டு முதல் கட்டமாக நான்கு வலையமைப்பு தொடருந்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்து செயல்பட்டனர். அதன் விளைவாக 1979 ஆம் ஆண்டு எம்.டி.ஆர் கூட்டுத்தாபனம் தனது முதல் துரிதகதி தொடருந்து சேவையை ஆரம்பித்தது. அதன் வசதிகள் நேர விரயமற்ற சேவை போன்றன ஹொங்கொங் மக்களால் கூடிய சீக்கரிமே கவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து எம்.டி.ஆர் கூட்டுத்தாபனம் மேலும் பல வழி வலையமைப்பு தொடரூந்து சேவைகளை விரிவுபடுத்தியது. மேலும் பல புதிய நிர்மான வலையமைப்புகளையும் மேற்கொண்டு வருகின்றது.

கடலடி தொடருந்து சேவை

[தொகு]

விமான நிலைய தொடருந்து சேவை

[தொகு]

தொடருந்து சேவை வலையமைப்பு

[தொகு]
வழிப் பாதை ஆரம்பம் இருந்து - வரை தொடருந்தகங்கள் நீளம் பயண நேரம்
கிழக்குத் தொடருந்து 1910 கிழக்கு சிம் சா சுயி லோ வூ (சீன எல்லை) /
லொக் மா சாவ்(சீன எல்லை)
15 34 கி.மீ 44 நிமிடங்கள்
குவுந்தொங் சேவை 1979 யா மா டேய் டியூ கெங் லெங் 15 12.5 கி.மீ 27 நிமிடங்கள்
சுன் வான் சேவை 1982 சென்ட்ரல் சுன் வான் 16 16 கி.மீ 30 நிமிடங்கள்
ஹொங்கொங் தீவு சேவை 1985 சுங் வான் ச்சை வான் 14 14.7 கி.மீ 25 நிமிடங்கள்
(ட்)டுங் சுன்ங் சேவை 1998 ஹொங்கொங் தீவு ட்டுங் சுன்ங் 8 34.8 கி.மீ 28 நிமிடங்கள்
விமான நிலையச் சேவை 1998 ஹொங்கொங் தீவு விமான நிலையம் 5 36.5 கி.மீ 28 நிமிடங்கள்
சுங்க் வான் ஓ சேவை 2002 நோர்த் பொயிண்ட் போ லேம் 7 12.5 கி.மீ 15 நிமிடங்கள்
மேற்கு சேவை 2003 நம் ச்சுங் ச்சுன் மூன் 9 30.5 கி.மீ 30 நிமிடங்கள்
மா ஓ சான் சேவை 2004 வூ கை சா தை வாய் 9 11.4 கி.மீ 16 நிமிடங்கள்
டிஸ்னி லேண்ட் சேவை 2005 சன்னி பே டிஷ்னி லேண்ட் 2 3.5 கி.மீ 4 நிமிடங்கள்
இலகு தொடருந்துகள்(11 routes) 1988 புதிய புனரமைப்புப் பகுதிகளில் புதிய புனரமைப்பு பகுதிகளில் 68 -- -- நிமிடங்கள்
System map of the MTR effective from 2 December 2007.
System map of the MTR effective from 2 December 2007.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "MTR Patronage Updates". MTR Corporation Limited. 2019. பார்க்கப்பட்ட நாள் 1 July 2019. Note that: 1) The "daily average" of MTR lines from this link actually means the "weekday average". The real daily average of MTR lines equals to the "monthly total" divided by the number of days in that month. 2) The rapid transit includes "domestic service", "Airport Express" and "cross-boundary". 3) "Others" includes "Intercity, light rail, and bus" and "HSR".
  2. MTR Press Release

வெளியிணைப்புகள்

[தொகு]