உள்ளடக்கத்துக்குச் செல்

உமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Corn being husked in the yard of a Dungan farmer in Kyrgyzstan
Women in Cape Verde using multiple pestles in a large mortar

தாவரவியலில் உமி (Husk) (ஒலிப்பு) அல்லது பதர் (hull) என்பது விதையின் வெளிப்புறக் கூடு அல்லது உறை ஆகும். இது பெரும்பாலும் செடியில் வளரும் சோளம் போன்ற தாவரத்தின் இலைப்போன்ற வெளிப்பகுதியைக் குறிக்கும். இது விதை, பழம், காய்கறிகளின் பாதுகாப்புக் கவசமாகும்.

உமி, பதர், பொட்டு, தோல் எனபன அரிசி, விதை, பருப்பு, பழம், காய்கறி ஆகியவற்றின் பாதுகாப்புறையாகும். இது பூச்சிகளும் சிறு விலங்குகளும் உரித்து நீக்கும் கழிவுகளையும் குறிக்கலாம்.

சமையலில் உமி என்பது பழங்கள் மற்றும் காய்கறிகளின் கழிவு பொருட்களை குறிக்கும். இது செம்பற்று பழத்தின் புற இதழ் மற்றும் காம்பு பகுதிகள் குறிக்கும்.

சில பருப்பு வகை தாவரங்களில் இது பொட்டு எனவும் பழங்களில் தோல் அழைக்கப்படுகின்றது.

பயிர் தாவரங்களில் பூசணி, காடைக்கண்ணி மற்றும் வாற்கோதுமை பயிர்கள் புறவுறை இல்லாதவை என அறியப்படுகின்றது

உமியை, பதரை நீக்குதல்

[தொகு]
Corn being husked in the yard of a Dungan farmer in Kyrgyzstan

உமியை நீக்குதல் என்பது கூலங்களின் வெளிபுறப் பூச்சை / உறையை நீக்குதலாகும்.

பதரை நீக்குதல் என்பது வைக்கோல் மற்றும் தேவையற்ற விதைகளை நீக்குதலாகும். சில நேரங்களில் இயந்திரங்களின் உதவியுடன் பதர் நீக்கப்படுகிறது. விதைகளிலிருந்து எண்ணெய் எடுப்பதற்காக, விதைகளிலுள்ள அயற் பொருட்கள் நீக்கவேண்டும். பின்னர் விதை மேலுள்ள உறை நீக்கப்படுகிறது. பட்டாணி விதையின் பதரை நீக்குதலில் 3 வகையான முறைகள் பின்பற்றபடுகின்றன.

  • வெப்ப முறையில் பதரை நீக்குதல்
  • மித வெப்ப முறையில் பதரை நீக்குதல்
  • குளிர் முறையில் பதரை நீக்குதல்

வெப்ப முறையில் பதரை நீக்குதல் களத்தில் நேரடியாக பட்டாணிகளைப் பிரிக்க பயன்படுகிறது. மித வெப்ப முறையில் பதரை நீக்குதல் பட்டாணிகளை ஏற்றுமதி செய்ய பயன்படுகிறது. குளிர் முறையில் பதரை நீக்குதல் உலர்த்திப் பதப்படுத்தும் கருவிகள் உள்ள ஆலைகளில் பயன்படுகிறது. உணவுக்கான அரிசியைப் பிரிக்க உமிநீக்கி எந்திரம் தேவைப்படும். இதற்கு பதப்படுத்தும் விளைபொருளையும் கருவியையும் சார்ந்து வேற்பட்ட உறைநீக்க வெப்பநிலைகள் தேர்வு செய்யப்படுகின்றன.

மூன்றாம் உலக நாடுகளில் உமியை நீக்குதல் மற்றும் பதரை நீக்குதல் பெரிய உலக்கையை கொண்டு கைகளினால் செய்யப்படுகின்றது. இவ்வுலக்கை மரத்தால் செய்யப்பட்டதும் ஒன்று அல்லது பலரால் பயன்படுத்த கூடியதாகும்.

உமியும் பதரும் மட்கி, அழிந்து போகும் தன்மைக் கொண்டது. எனவே, இவற்றை எருக்களாக மாற்றலாம்.[1]

மேலும் காண்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hulling
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்

[தொகு]
  1. Cote, Wilfred (2013-12-01). Biomass Utilization (in ஆங்கிலம்). Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781475708332. Archived from the original on 2017-12-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமி&oldid=3916248" இலிருந்து மீள்விக்கப்பட்டது