உள்ளடக்கத்துக்குச் செல்

அமைதியின் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமைதியின் கோபுரம் (tower of silence) அல்லது தக்மா (Dakhma) (பாரசீக மொழி:دخمه) என்பது இறந்தோரின் உடலை இருத்தி வைக்க சரத்துஸ்திர, (பார்சி) சமுதாயத்தினரால் எழுப்பப்பட்ட வட்ட வடிவ கோபுர அமைப்பாகும்.

நோக்கம்

[தொகு]

சொராஸ்டிர சமுதாயத்தில் இறந்த உடல் அசுத்தமானதாய்க் கருதப்படுகிறது. இறந்த உடலைப் புதைத்தால் அது மண்ணையும் எரித்தால் நெருப்பையும் அசுத்தப்படுத்தி விடும். அத்தோடு இறந்தவர் இறுதி தானமாய்த் தனது உடலையும் பறவைகள் உண்ணத் தரும் நோக்கில் இறந்தவர்களின் உடல்கள் அமைதியின் கோபுரத்தில் கிடத்தப்படுகின்றன. கழுகுகள் வந்து இறந்தவர் உடலை உண்டுத் தூய்மை செய்கின்றன.

ஈரானில்

[தொகு]

சொராஸ்டிர சமயத்தின் பிறப்பிடமான ஈரானில் இப் பழக்கம் 1970 ஆம் ஆண்டு முற்றும் தடை செய்யப்பட்டு அமைதியின் கோபுரங்கள் இழுத்து மூடப்பட்டன.

இந்தியாவில்

[தொகு]

கணிசமான எண்ணிக்கையிலான பார்சி மக்கள் வாழும் இந்தியாவில் இப்பழக்கம் இன்னும் தொடர்கிறது. ஆனால் கால்நடைகளில் டைக்ளோஃபீனாக் மருந்தைப் பயன்படுத்தி 99.9 விழுக்காடு இந்தியக் கழுகுகள் அழிந்து விட்டதால் பார்சி மக்கள் இறந்த உடலைப் புதைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Swan G, Naidoo V, Cuthbert R, Green RE, Pain DJ, Swarup D, Prakash V, Taggart M, Bekker L, Das D, Diekmann J, Diekmann M, Killian E, Meharg A, Patra RC, Saini M, Wolter K (2006). "Removing the threat of diclofenac to critically endangered Asian vultures". PLoS Biol 4 (3): e66. doi:10.1371/journal.pbio.0040066. பப்மெட்:16435886. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைதியின்_கோபுரம்&oldid=2229781" இலிருந்து மீள்விக்கப்பட்டது