ஈகோஸ்ப்பொட்டாமி சமர் என்பது பண்டைய கிரேக்கத்தில் கிமு 405 இல் நடந்த ஒரு கடற்படை சமராகும். மேலும் இது பெலோபொன்னேசியப் போரின் கடைசி பெரிய போராகும். இந்தப் போரில், லைசாந்தரின் தலைமையிலான எசுபார்த்தன் கடற்படையானது ஏதெனியன் கடற்படையை அழித்தது. ஏதென்சு தானியங்களை இறக்குமதி செய்யவோ அல்லது கடலில் தடையின்றி தன் பேரரசின் பகுதிகளுடன் தொடர்பு கொள்ளவோ முடியாத நிலை ஏற்பட்டதால் இந்தப் போருடன் பெலோபொனிசியப் போர் முடிவுக்கு வந்தது. மேலும்...
1922 – துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஐரியக் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ரொபேர்ட் ஏர்ஸ்கின் சைல்டர்சு உட்பட ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1965 – யோசப் மொபுட்டுகொங்கோவின் அரசுத்தலைவர் பதவியை கைப்பற்றினார். இவர் நாட்டின் பெயரை சயீர் என மாற்றி 30 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
1971 – வாசிங்டனில் பெரும் சூறாவளி நாளன்று கடத்தப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து டான் கூப்பர் என்பவன் 200,000 அமெரிக்க டாலர்களுடன் வான்குடையுடன் கீழே குதித்தான். இவனோ பணமோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
வியட்நாம் கிராமம் ஒன்றில் ஊதுபத்திக் கரைசலில் தோய்த்த பிறகு, ஊதுபத்திகள் உலர வைக்கப்படுகின்றன. ஊதுபத்தி பெரும்பாலும் இயற்கை பொருட்களாலும் சிறிது செயற்கை வாசனை நீர்மங்களாலும் சேர்ந்து செய்யப்பட்ட கலவையை ஆகும்.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,69,595 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.