ஈழப்போரில் கிழக்குப் போர்முனை என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கிழக்கு திருக்கோணமலை மாவட்டத்தில் நெல்வயல்களுக்கான நீர் விநியோகத்தை புலிகள் துண்டித்ததைக் காரணமாக கொண்டு 2006, யூலை, 21 அன்று மோதலாக துவங்கியது. ஏறக்குறைய ஓராண்டு சண்டைக்குப் பிறகு, 2007, யூலை, 11 குடும்பிமலையை (பரோனின் தொப்பி) கைப்பற்றிய பின்னர் கிழக்கு மாகாணத்தின் முழு கட்டுப்பாடும் தங்கள் வசம் வந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. இச்சமயத்தில் சம்பூர், வாகரை, கஞ்சிகுடிச்சாறு, கொக்கடிச்சுளாய், குடும்பிமலை ஆகிய இடங்களில் பெரும் போர்கள் நடந்தன. இராணுவம் மற்றும் பொதுமக்கள் இறப்புகள் இருபுறமும் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன. மேலும்...
2020 இல் புவியில் தென்பட்ட நியோவைஸ் எனும் வால்வெள்ளிக் காட்சி. வால்வெள்ளி பனிக்கட்டியாலான சிறிய சூரியக் குடும்பப் பொருளாகும். இது சூரியனுக்கு நெருக்கமாக கடக்கும்போது சூடாகி வளிமங்களை வெளியிடும். இந்நிகழ்வு வளிமவீசல் அல்லது தாரை எனப்படுகிறது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,72,122 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.