1914
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1914 (MCMXIV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மே 9 - துடுப்பாட்டத்தில் 3000 முதற்தர விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பெருமையை ஜாக் ஹேர்ண் பெற்றார்.
- மே 29 - அயர்லாந்தின் ஓஷன் லைனர் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1,024 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 28 - ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் ஃபேர்டினண்ட், மற்றும் அவரது மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணியாக அமைந்தது.
- ஜூலை 28 - முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. ஆஸ்திரியா-ஹங்கேரி சேர்பியா மீது போரைப் பிரகடனப்படுத்தியது.
- ஆகத்து 1 - ஜெர்மனி ராஷ்யா மீது போரைப் பிரகடனப்படுத்தியது.
- ஆகத்து 2 - ஜேர்மனியப் படையினர் லக்சம்பேர்கை ஆக்கிரமித்தன.
- ஆகத்து 3 - ஜெர்மனி ரஷ்யாவின் நேச நாடான பிரான்சுடன் போர்ப் பிரகடனம் செய்தது.
- ஆகத்து 4 - ஜெர்மனி நடுநிலையான பெல்ஜியத்தை முற்றுகை இட்டது. பிரித்தானியா ஜெர்மனியுடன் போரை அறிவித்தது. ஐக்கிய அமெரிக்கா தனது நடுநிலையை அறிவித்தது.
- ஆகத்து 5 - ஐக்கிய அமெரிக்காவும் பனாமாவும் கூட்டாக பனாமாக் கால்வாய் ஒப்பந்தத்தைல் கைச்சாத்திட்டன.
- ஆகத்து 15 - பனாமாக் கால்வாய் பொதுப்பாவனைக்குத் திறந்துவிடப்பட்டது.
- ஆகத்து 29 - முதல் உலகப்போரில் பிரிட்டன் பெண்கள் பிரிட்டன் பெண்கள் நிவாரணப்படை துவக்கப்பட்டு போரில் குதித்தது.
- ஆகத்து 23 - ஜப்பான் ஜெர்மனியுட போரை அறிவித்தது.
- நவம்பர் 4 - பிரித்தானியாவும் பிரான்சும் துருக்கியுடன் போரை அறிவித்தன.
- நவம்பர் 5 - ஐக்கிய இராச்சியம் சைப்பிரசைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதூ.
- நவம்பர் 24 - முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
திகதி குறிப்பிடாத நிகழ்வுகள்
[தொகு]- மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.
பிறப்புகள்
[தொகு]- மார்ச் 25 - நார்மன் போர்லாக், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 2009)
- சூலை 8 - ஜோதி பாசு, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் (இ. 2000)
- ஆகத்து 23 - டி. எஸ். பாலையா, தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1972)
- நவம்பர் 15 - வி. ஆர். கிருஷ்ணய்யர், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் (இ. 2014)
இறப்புகள்
[தொகு]நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் - மாக்ஸ் வொன் லாவு (Max von Laue)
- வேதியியல் - தியோடார் ரிச்சார்ட்ஸ் (Theodore William Richards)
- மருத்துவம் - றொபேர்ட் பாரணி (Robert Bárány)
- இலக்கியம் - வழங்கப்படவில்லை
- அமைதி - வழங்கப்படவில்லை