1510கள்
Appearance
1510கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1510ஆம் ஆண்டு துவங்கி 1519-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
1510
- பெப்ரவரி 27 - போர்த்துகலின் அஃபோன்சோ டி ஆல்புகேர்க்கி கோவாவைக் கைப்பற்றினார்.
- மே 12 - சீனாவில் மிங் பேரரசை வீழ்த்தும் முகமாக சூ சிபான் தலைமையில் கிளர்ச்சி துவங்கியது.
- மே 30 - சீனாவில் சூசிபானின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
- சூலை - இத்தாலிய மாநிலங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு ஆரம்பிகட்ட கத்தோலிக்க அணி, பிரெஞ்சு வசமிருந்த ஜெனோவா மீது தாக்குதலை நடத்தியது.
- பீட்டர் ஹென்லீன் என்பவர் முதலாவது சட்டைப்பை கடிகாரத்தை உருவாக்கினார்.
- சூரியகாந்திப் பூக்கள் முதன் முதலாக ஐரோப்பாவில் அறிமுகமாயின.
1511
- ஆகத்து 15 - மலாக்கா சுதானகத்தின் தலைநகர் மலாக்காவை போர்த்துகலின் அஃபோன்சோ டி ஆல்புகேர்க்கி கைப்பற்றினான். மலாக்கா நீரிணைப் பகுதி போர்த்துக்கல் வசமானது. சுல்தானகம் ஜொகூரில் இருந்து அரசோச்சியது.[1]
- நவம்பர் - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றிக்கும், அராகனின் இரண்டாம் பெர்டினாண்டுக்கும் இடையில் பிரான்சுக்கு எதிரான கூட்டணி உருவானது.
- நவம்பர் 20 - மலாக்காவில் இருந்து கோவாவுக்கு பெரும் செல்வங்கள் மற்றும் அஃபோன்சோ டி ஆல்புகேர்க்கிவையும் ஏற்றிச் சென்ற புரோல் டி லா மார் கப்பல் தாண்டது.
- டியேகோ வெலாசுக்கெசு, எர்னான் கோட்டெஸ் ஆகியோர் கியூபாவைக் கைப்பற்றினர்.
- துவார்த்தே பர்போசா இந்தியாவுக்கு இரண்டாவது தடவையாக வந்தார். கண்ணூரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் எழுத்தராகப் பணியாற்றினார்.
- "ஒரு கருப்பர் நான்கு இந்தியர்களின் பணியைச் செய்யக்கூடியவர்" என அராகனின் இரண்டாம் பெர்டினண்டு நம்பினார்.
- புவேர்ட்டோ ரிக்கோவின் தென்மேற்கே பழங்குடிகளின் இரையினோ எனப்படும் கிளர்ச்சி இடம்பெற்றது.
- முதலாவது கறுப்பின அடிமைகள் கொலொம்பியாவுக்குக் கொண்டு வரப்பட்டனர்.
1512
- ஏப்ரல் 11 - காஸ்டன் தலைமையிலான பிரெஞ்சுப் படைகள் ரவென்னா என்ற இடத்தில் எசுப்பானியப் படைகளைத் தோற்கடித்தது. ஆனால், காஸ்டன் கொல்லப்பட்டார்.
- அக்டோபர் 19 - மார்ட்டின் லூதர் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
- நவம்பர் 1 - மைக்கலாஞ்சலோவினால் வரையப்பட்ட சிஸ்டைன் ஆலய உட்கூரை ஓவியங்கள் முதற்தடவையாகக் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டன.
- அந்தோனியோ டி ஆப்ரூ திமோர் தீவைக் கண்டுபிடித்தார்.
- பிரான்சிசுக்கோ செராவோ மலுக்கு தீவுகளை சென்றடைந்தார்.
- யுவான் போன்சி டி லெயோன் துர்கசு கைகோசு தீவுகளைக் கண்டுபிடித்தார்.
- பெதுரோ மாசுக்கரேனசு தியேகோ கார்சியாவைக் கண்டுபிடித்து பின்னர் மொரிசியசை அடைந்தார்.
1513
- ஏப்ரல் 2 - யுவான் போன்சு டெ லெயோன் புளோரிடாவில் தரையிறங்கிய முதலாவது ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றார்.
- செப்டம்பர் 9 - இசுக்கொட்லாந்தின் மனரசன் நான்காம் யேம்சு ஆங்கிலேயப் படையினருடன் புளோடன் என்ற இடத்தில் இடம்பெற்ற சண்டையில் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். யேம்சின் மகன் ஐந்தாம் யேம்சு என்ற பெயரில் அரசனானான்.
- செப்டம்பர் 25 - வாசுக்கோ நூனெசு டி பால்போவா அமைதிப் பெருங்கடலைக் கண்ட முதலாவது ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றார்.
- டிசம்பர் - பிரான்சின் பன்னிரண்டாம் லூயி போப் மற்றும் எசுப்பானியாவுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்தார்.
1514
- சனவரி 10 - வெனிசு நகரின் ரியால்ட்டோ பகுதியில் பெருந்தீ பரவியது.
- மார்ச் 12 - போர்த்துக்கீச மன்னர் முதலாம் மனுவேல், பத்தாம் லியோ திருத்தந்தைக்கு அனுப்பிய வெள்ளை, மற்றும் ஆசிய யானை அடங்கலான பெரும் தூதுப் படை ஒன்று ரோம் நகரை அடைந்தது.
- மார்ச் - ]பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் புனித ரோமப் பேரரசர் முதலாம் மக்சிமிலியனுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
- சூன் 13 - அக்காலத்தைய மிகப் பெரும் 1,000 தொன் நிறையுடைய போர்க் கப்பல் என்றி கிரேசு ஆ டீயு இங்கிலாந்தில் கட்டப்படட்து.[2][3]
- செப்டம்பர் 15 - தாமஸ் வோல்சி இங்கிலாந்தின் யோர்க் நகரப் பேராயராக நியமிக்கப்பட்டார்.[4]
- அக்டோபர் 9 - பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும், இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி உடன்பிறப்பு மேரி தியூடருக்கும் திருமணம் நடைபெற்றது.[4]
- நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் ஞாயிற்றுமையம் பற்றி விளக்கும் தனது "காமென்டாரியோலசு நூலை எழுதினார்.
1515
- சனவரி 25 - முதலாம் பிரான்சிசு பிரெஞ்சு மன்னராக முடிசூடினார்.
- சூலை 22 - வியென்னாவில் இரண்டு அரச் திருமணங்கள் இடம்பெற்றன. அங்கேரி மன்னர் இரண்டாம் விளாதிசுலாசின் ஒரே மகன் லூயி, புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமீலியனின் பேர்த்தியான ஆத்திரியாவின் மேரியை மணம் முடித்தான். மேரியின் தம்பி முதலாம் பெர்டினாண்டு இரண்டாம் விளாதிசுலாசின் மகள் அன்னாவை உடன்பாடு ஒன்றின் பேரில் மணம் புரிந்தான்.
- ஆகத்து 25 - டியேகோ விலாசுக்கெசு டெ குவெல்லார் அவானா நகரைக் கண்டுபிடித்தார்.
- நவம்பர் 15 - தாமஸ் வோல்சி கர்தினாலாக நியமிக்கப்பட்டார்.
- டிசம்பர் 24 - தாமஸ் வோல்சி இங்கிலாந்தின் உயராட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
- டியூரரின் காண்டாமிருகம் மரச்சிற்பம் உருவாக்கப்பட்டது.
1516
- மார்ச்சு - இரண்டாம் பெர்டினண்டுவின் இறப்பை அடுத்து அவனது பேரன் ஐந்தாம் சார்லசு எசுப்பானியாவின் மன்னனாக முடிசூடினான்.
- சூலை - உதுமானியப் பேரரசன் முதலாம் செலிம் சிரியாவை ஊடுருவித் தாக்கினான்.
- டிசம்பர் 4 - பிரான்சுக்கும் புனித உரோமைப் பேரரசுக்கும் இடையில் பிரசெல்சு நகரில் அமைதி உடன்பாடு எட்டபட்டது.
- தாமசு மோரின் யுட்டோபியா என்ற பிரபலமான நூல் இலத்தீன் மொழியில் வெளியிடப்பட்டது.
- பிரகாச மாதா ஆலயம் சென்னையில் அமைக்கப்பட்டது.
1517
- பெப்ரவரி 3 - உதுமானியப் பேரரசு கெய்ரோவைக் கைப்பற்றியது. மாம்லுக் சுல்தானகம் வீழ்ந்தது.
- அக்டோபர் 31 - கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்: மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை வெளியிட்டார்.
- ஐரோப்பிய வணிகர் ரபாயெல் பெரெஸ்ட்ரெல்லோ தெற்கு சீனாவில் 1513 இல் சென்ற பின்னர் முதல் தடவையாக வணிகர் குழு ஒன்று சீனா சென்றது. குவாங்சோ துறையில் இறங்கி சீன வணிகர்களுடன் வணிகத்தில் ஈடுபட்டனர்.
- உதுமானியப் பேரரசு சுல்தான் முத்கலாம் செலிம் எகிப்தைக் கைப்பற்றினான்.
- இங்கிலாந்தில் வியர்வைக் காய்ச்சல் கொள்ளை நோய் மூன்றா தடவையாக ஆக்சுபோர்டு, கேம்பிரிட்ச் நகரங்களில் பரவியது.
- இப்ராகிம் லோடி தில்லியின் சுல்தானாக பொறுப்பேற்றார்.
1518
- ஏப்ரல் 18 - போலந்தின் அரசியாக போனா ஸ்ஃபோர்சா முடிசூடினார்.
- மே 26 - வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு இடம்பெற்றது.
- சூலை - பிரான்சின் ஸ்ட்ராஸ்பேக் நகரில் மக்கள் தொடர்ந்து நடனமாடியதில் பலர் இறந்தனர்.
- அக்டோபர் 3 - லண்டன் உடன்படிக்கை மேற்கு ஐரோப்பாவில் தற்காலிகமாக அமைதியைக் கொணர்ந்தது.
- ஆப்பிரிக்காவில் அடிமை வணிகம் ஆரம்பமானது.
- லோப்பசு சுவார் ஆல்வெரெங்கா தலைமையில் 19 போர்த்துக்கீசக் கப்பல்கள் இலங்கை வந்தடைந்தன. உள்ளூரில் சிங்களவர் எதிர்ப்புத் தெரிவித்தனராயினும், அவர்கள் கொழும்பில் ஒரு கோட்டையை நிர்மாணித்தனர்.[5]
1519
- மார்ச் 4 - ஹேர்னான் சோர்ட்டேஸ் (Hernán Cortés) மெக்சிகோவில் தரையிறங்கினான்.
- ஜூன் 28 - ஸ்பெயினின் முதலாம் சார்ள்ஸ் ரோம் பேரரசின் ஐந்தாம் சார்ளஸ் என்ற பெயருடன் மன்னனானான்.
- செப்டம்பர் 20 - பேர்டினண்ட் மகலன் உலகைச் சுற்றிவர ஐரோப்பாவிலிருந்ந்து புறப்பட்டார்.
பிறப்புகள்
[தொகு]1510
- கெம்பெ கவுடா, பெங்களூரு நகரை உருவாக்கியவர் (இ. 1569)
1515
- மார்ச் 28 - அவிலாவின் புனித தெரேசா, எசுப்பானியப் புனிதர் (இ. 1582)
- மே 18 - கேண்டலிஸ் நகர் பெலிக்ஸ், இத்தாலியப் புனிதர் (இ. 1587)
- சூலை 21 - பிலிப்பு நேரி, இத்தாலிய ரோமன் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1595)
- கோவிந்த தீட்சிதர், தஞ்சை நாயக்க அரசர்களின் ஆசான், ஆலோசகர் (இ. 1635)
இறப்புகள்
[தொகு]1510
- கியார்கியோன், வெனிசு ஓவியர் (பி. 1477)
1512
- பெப்ரவரி 22 - அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய வணிகர், நிலப்படவியலாளர், புதிய உலகத்தைக் கண்டுபிடித்தவர் (பி. 1454)
1513
- இரண்டாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1463)
1516
- ஆகத்து 9 - இரானிமசு போசு, இடச்சு ஓவியர் (பி. ~1450)
1517
- லூகா பசியோலி, இத்தாலியக் கணிதவியலர் (பி. 1445)
1519
மேற்கோள்கள்
[தொகு]- ↑ van Gent, Robert Harry. "Islamic-Western Calendar Converter". Utrecht University. பார்க்கப்பட்ட நாள் 2011-08-23.
- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 139–142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ Paine, Lincoln P. (1997). Ships of the World: an Historical Encyclopedia. Houghton Mifflin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85177-739-2.
- ↑ 4.0 4.1 Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 197–204. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 1