100 (எண்)
Appearance
| ||||
---|---|---|---|---|
முதலெண் | நூறு | |||
வரிசை | 100ஆவது நூறாவது | |||
காரணியாக்கல் | 22· 52 | |||
காரணிகள் | 1, 2, 4, 5, 10, 20, 25, 50, 100 | |||
ரோமன் | C | |||
ஒருங்குறியீடு(கள்) | C, ⅽ | |||
இரும எண் | 11001002 | |||
முன்ம எண் | 102013 | |||
நான்ம எண் | 12104 | |||
ஐம்ம எண் | 4005 | |||
அறும எண் | 2446 | |||
எண்ணெண் | 1448 | |||
பன்னிருமம் | 8412 | |||
பதினறுமம் | 6416 | |||
இருபதின்மம் | 5020 | |||
36ம்ம எண் | 2S36 | |||
கிரேக்கம் | ρ | |||
அரபு | ١٠٠ | |||
வங்காளம் | ১০০ | |||
சீனம் | 佰,百 | |||
கொரியன் | 백 | |||
தேவநாகரி | १०० | |||
எபிரேயம் | ק (Kuf) | |||
கெமர் | ១០០ | |||
தமிழ் | ௱, க00 | |||
தாய் | ร้อย, ๑๐๐ |
100 (நூறு) (ஆங்கிலம்: One Hundred) என்பது தமிழ் எண்களில் ௱ அல்லது ௧௦௦ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] நூறு என்பது தொன்னூற்று ஒன்பதுக்கும் நூற்று ஒன்றுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
கணிதவியல்
[தொகு]காரணிகள்
[தொகு]- நூறின் நேர்க் காரணிகள் 1, 2, 5, 10, 20, 25, 50, 100 என்பனவாகும்.
சிறப்புகள்
[தொகு]- விழுக்காடு கணிப்பதற்கு நூறு எண்ணே அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது
- முதல் ஒன்பது பகா எண்களின் கூட்டுத்தொகை நூறு ஆகும்
- நான்கு இணை (சோடி) பகா எண்களின் கூட்டுத்கொகை (47 + 53, 17 + 83, 3 + 97, 41 + 59)
- முதல் நான்கு எண்களின் மூன்றடுக்கு கூட்டுத்தொகை நூறு (100 = 13 + 23 + 33 + 43)
- அதுமட்டுமின்றி, 26 + 62 = 100, அதனால் 100 என்பது ஒரு லேலண்டு எண் ஆகும்.
- நூறு 18- கோண எண்ணாகும்
- நூறு ஒரு ஹசார்டு எண் ஆகும்
- மிகச்சரியாக 100 பகா எண்களின் இலக்கங்கள் ஏறு வரிசையில் அமைந்த்துள்ளது (எ. கா. 239, 2357 மற்றும் பல)
அறிவியல்
[தொகு]- 100 என்பது பெர்மியத்தின் அணுவெண் ஆகும்.
- செல்சியஸ் அளவுகோளில் 100 என்பது, நீரின் கொதிநிலையைக் குறிக்கும்.
அரசியல்
[தொகு]- ஐக்கிய அமெரிக்காவின் மேலவையில் மிகச்சரியாக நூறு உறுப்பினர்கள் உள்ளனர்.
- இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் என்பதினை நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
பணம்
[தொகு]- பெரும்பாலான நாடுகளில் 100-என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு நாணயம் மற்றும் பண மதிப்பீடு செய்யப்படுகிறது.
எ.கா. 100 பைசா = 1 ரூபாய்
பொழுதுபோக்கு
[தொகு]- ஒரு திரைப்படம் அல்லது மேடை நாடகம் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக நடந்தால், அத்திரைப்படம் அல்லது மேடை நாடகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
விளையாட்டு
[தொகு]- பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளில் 100 என்ற எண் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- 100 மீற்றர் ஓட்டப் பந்தயம் என்பதில் துவங்கி பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளில் 100 அல்லது அதனுடைய அடுக்கை அடிப்படையாகக் கொண்டு போட்டியாளர்களின் இலக்கின் தூரம் நிர்ணயிக்கப்படுகின்றன.
- துடுப்பாட்டத்தில் ஒருவர் 100 - ஓட்டம் எடுக்கும் பொழுது மைதானத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று அவரைப் பாராட்டுகின்றனர்.
பிற துறைகள்
[தொகு]- வரலாற்றில் ஆண்டுகள் 100 அடிப்படையில் நூற்றாண்டுகளாகக் கணக்கிடப்படுகின்றன. நூற்றாண்டில் உள்ள ஆண்டுகளின் எண்ணிக்கை 100
- இந்தியா, இசுரேல், நேபாளம் மற்றும் கிரீசு நாடுகளில் 100 என்பது காவல்துறையினரின் தொலைபேசி எண்
- பெல்ஜியத்தில், 100 என்பது தீயணைப்பு மற்றும் நோயாளர் ஊர்தியை (ஆம்புலன்சு) தொடர்பு கொள்ள பயன்படும் தொலைபேசி எண்ணாகும்
- ஐக்கிய ராச்சிய நாடுகளில், 100 என்பது தொலைபேசி இணைப்பகத்தின் எண்
- 100 என்பது மீயுரை பரிமாற்ற நெறிமுறையில் வாடிக்கையாளர் தன்னுடைய கோரிக்கையினை தொடர வேண்டும் என்பதற்கான அறிவிப்பு
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- On the Number 100 (ஆங்கில மொழியில்)