உள்ளடக்கத்துக்குச் செல்

லாசா

ஆள்கூறுகள்: 29°39′N 91°06′E / 29.650°N 91.100°E / 29.650; 91.100
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாசா
拉萨
மாவட்ட நகரம்
拉萨市
நாடுசீன மக்கள் குடியரசு
தன்னாட்சிப் பகுதிதிபெத்
அரசு
 • மேயர்டோயே செசுக்
 • துணை மேயர்ஜிக்மே நாம்கியால்
பரப்பளவு
 • நிலம்53 km2 (20 sq mi)
ஏற்றம்
3,490 m (11,450 ft)
மக்கள்தொகை
 (2009)
 • மாவட்ட நகரம்11,00,123
 • நகர்ப்புறம்
3,73,000
 • முதன்மை இனங்கள்
திபெத்தியர்கள்; ஹான்; உயி
 • மொழிகள்
திபெத்திய மொழி மாண்டரின் ஜின் மொழி (ஹோஹோட் வழக்கு)
நேர வலயம்ஒசநே+8 (சீன சீர்தர நேரம்)
இடக் குறியீடு850000
இணையதளம்http://www.lasa.gov.cn/
இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.

லாசா (Lhasa அல்லது சில நேரங்களில் Lasa) சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியின் நிர்வாகத் தலைநகரமும் மாவட்ட நிலை நகரமும் ஆகும். திபெத்திய பீடபூமியின் இரண்டாவது மிக்கூடிய மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகிறது. 3,490 மீட்டர்கள் (11,450 அடி) உயரத்தில் அமைந்துள்ள லாசா உலகின் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள நகரங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு பண்பாட்டு பாரம்பர்யமிக்க திபெத்திய பௌத்த தலங்கள் அமைந்துள்ளன; பொடாலா அரண்மனை, ஜோகாங் கோவில், நோர்புலிங்க்கா அரண்மனைகள் என்பன சிலவாகும்.

பெயர்க் காரணம்

[தொகு]

லாசா என்பதற்கு "கடவுளின் இடம்" என்பது நேரடிப் பொருளாகும். பழங்கால திபெத்திய ஆவணங்களும் கல்வெட்டுகளும் இந்த இடத்தை ராசா எனக் குறிப்பிடுகின்றன. இது நேரடியாக "ஆடுகளின் இடம்" என்ற பொருளையும், ராவே சா என்பதன் சுருக்கமாகக் கொண்டால் "சுவரால் வளைக்கப்பட்ட இடம்" என்ற பொருளையும்[1] கொடுக்கிறது. இவை மார்போரி குன்றுகளில் வேந்திய குடியிருப்பினுள் அமைந்த வேட்டைக் களமாக இருந்திருக்கலாம் என்ற கருத்துக்கு துணை நிற்கின்றன.[2] கி.பி 822ல் சீனாவிற்கும் திபெத்திற்கும் இடையிலான உடன்பாட்டில் லாசா என்ற பெயரே பதிவாகி உள்ளது.[3]

பொருளாதாரம்

[தொகு]

உழவுத் தொழில் முக்கிய இடம் பெறுகிறது. செம்பு, ஈயம், துத்தநாகம் உள்ளிட்ட தாதுக்கள் இங்கு கிடைக்கின்றன. நீர் வளம் நிரம்பியுள்ளதால், பாசனத்திற்கு குறையில்லை. இங்குள்ள பொத்தாலா அரண்மனை, ஜோகாங், நோர்புலிங்கா அரண்மனை, இமயமலை அடிவாரம் உள்ளிட்டவற்றால் சுற்றுலாத் துறை வருவாய் ஈட்டுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Anne-Marie Blondeau and Yonten Gyatso, 'Lhasa, Legend and History,' in Françoise Pommaret-Imaeda (ed.)Lhasa in the seventeenth century: the capital of the Dalai Lamas, BRILL, 2003, pp.15-38, pp.21-22.
  2. John Powers, Introduction to Tibetan Buddhism, Snow Lion Publications, 2007, p.144.
  3. Anne-Marie Blondeau and Yonten Gyatso, 'Lhasa, Legend and History,' pp.21-22.

உசாத்துணைகள்

[தொகு]

மேலும் அறிய

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lhasa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வரைபடங்களும் வான்வழிப் படிமங்களும்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லாசா&oldid=3578578" இலிருந்து மீள்விக்கப்பட்டது