உள்ளடக்கத்துக்குச் செல்

ஐ.எசு.ஓ 9000

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐஎஸ்ஓ 9000 என்பது தரக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கான தரநிலைகளின் குடும்பம் ஆகும். தரங்களுக்கான சர்வதேச அமைப்பான ஐஎஸ்ஓ ஆல் ஐஎஸ்ஓ 9000 நிர்வகிக்கப்படுகிறது என்பதுடன், அதிகாரம் அளிக்கின்ற மற்றும் அங்கீகரிக்கப்படுகின்ற அமைப்புகள் மூலமும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தேவைகளில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, விதிகளும் மாற்றியமைக்கப்படுகின்றன. ஐஎஸ்ஓ 9001:2008 (இது ஐஎஸ்ஓ 9000௦ குடும்பத்தில் காணப்படும் தரநிலைகளுள் ஒன்றாகும்) தரநிலைகளைப் பெறுவதற்கான சில தேவைகள் பின்வருமாறு

  • வியாபாரத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் வழிமுறைகளை அளிப்பது;
  • நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் கண்காணிப்பு;
  • போதுமான தகவல்களை வைத்திருப்பது;
  • குறைகளைக் கண்டறிந்த பின்னர், பொருத்தமான மற்றும் சரியான நடவடிக்கைகளை எங்கே மேற்கொள்ள வேண்டும் என்பதைக் கண்டறியும் வெளியீட்டுப் பரிசோதனை;
  • சிறப்பான வெளியீட்டினைப் பெற, ஒவ்வொரு நடவடிக்கை மற்றும் தர அமைப்பைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்தல்; மற்றும்
  • படிப்படியான முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்

ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு “ஐஎஸ்ஓ 9001 சான்றிதழைப் பெற்றது” அல்லது “ஐஎஸ்ஓ 9001 ஆல் அங்கீகரிக்கப்பட்டது” என்பதை வெளிப்படையாக அறிவிப்பதற்கு முன்பு, அந்த நிறுவனம் அல்லது அமைப்பு ஐஎஸ்ஓ 9001 ஆல் தனிப்பட்ட முறையில் பரிசோதனை செய்யப்பட்டு, சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். ஐஎஸ்ஓ 9001 தரச் சான்றிதழ் விளைபொருட்கள் மற்றும் சேவைகளின் தரங்களுக்கு உத்திரவாதம் அளிப்பதில்லை; மாறாக அது பயன்பாட்டில் இருக்கும் வியாபார நடவடிக்கைகள் சம்பந்தமான ஒழுங்குமுறைகளுக்கு உத்திரவாதம் அளிக்கிறது.

ஐஎஸ்ஓ 9000 ஐக் குறித்து மக்களுக்கு இருக்கும் குழப்பம் மற்றும் அறிவின்மையை சந்தையிடல் துறைகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. சரக்குகள் மற்றும் சேவைகளின் பங்களிப்பு ஐஎஸ்ஓ 9000 தரநிலையை சிறப்பான முறையில் பறைசாற்றும்படியாக இருக்கின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஐஎஸ்ஓ 9000 மற்றும் ஐஎஸ்ஓ 9001 ஆகிய இரண்டையும் ஒன்றே என்று கருதுகின்றனர்.

தரநிலைகள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகின்றன என்பதுடன், அவைகள் பல்வேறு நிறுவனங்களில் பயன்பட்டு வருகின்றன. ஐஎஸ்ஓ சொற்களஞ்சியத்தில் “விளைபொருள்” என்பது குறிக்கோள், சேவைகள், அல்லது மென்பொருளைக் குறிக்கிறது.

தரம் என்பது “வளர்ச்சியைக்” குறிக்கிறது – ஐஎஸ்ஓ 9001 “தரம்” முயன்று பெற வேண்டிய ஒரு முக்கிய அங்கீகாரமாகும், மேலும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இது மிகப்பெரிய நன்மையை அளிக்கிறது, இதன் காரணமாக வியாபாரத்தின் தர மேம்பாட்டை நிலை நிறுத்துவதற்கு உத்திரவாதம் அளிக்கிறது.

ஐஎஸ்ஓ 9001 இன் பொருளடக்கம்

[தொகு]
துஸ்கிஜியில் உள்ள மீன் வியாபாரியின் ஐஎஸ்ஓ 9001 சான்றிதழ்

ஐஎஸ்ஓ 9001:2008 தரக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் தேவைகள் குறித்த 30 பக்கங்கள் அடங்கிய ஆவணம் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தேசிய தரநிலைகள் அமைப்பில் அளிக்கப்படுகின்றது. அதன் பொருளடக்கம் பின்வருமாறு:

  • பக்கம் iv: முன்னுரை
  • பக்கம் v முதல் vii வரை: பிரிவு 0 அறிமுகம்
  • பக்கம் 1 முதல் 14 வரை: தேவைகள்
    • பிரிவு 1: நோக்கம்
    • பிரிவு 2: ஒழுங்குமுறை குறிப்புகள்
    • பிரிவு 3: நிபந்தனை மற்றும் வரையறைகள் (ஐஎஸ்ஓ 9000 பயன்படுத்தப்படுவதில்லை, மாறாக ஐஎஸ்ஓ 9001 பயன்படுத்தப்படுகிறது)
  • பக்கங்கள் 2 முதல் 14 132 1 வரை
    • பிரிவு 4: தரக் கட்டுப்பாட்டு அமைப்பு
    • பிரிவு 5: நிர்வாகத்தின் கடமை
    • பிரிவு 6: மூலவள நிர்வாகம்
    • பிரிவு 7: விளைபொருள் பகுப்பாய்வு
    • பிரிவு 8: அளவீடு, பகுப்பாய்வு மற்றும் முன்னேற்றம்

பயனர்கள் ஒன்று முதல் எட்டு வரை உள்ள அனைத்துப் பிரிவுகளையும் தெரிந்துகொள்வது அவசியமாகிறது, ஆனால் கியூஎம்எஸ் இல் நான்கு முதல் எட்டு வரையிலான பிரிவுகளே விவரிக்கப்பட்டுள்ளன.

  • 15 முதல் 22 ஆம் பக்கங்கள் வரை: ஐஎஸ்ஓ 9001 மற்றும் மற்ற தரநிலைகளுக்கு இடையேயான ஒற்றுமையின் அட்டவணை
  • பக்கம் 23: விவரத் தொகுப்பு

இந்தத் தரநிலைகள் பின்வரும் ஆறு அத்தியாவசியமான ஆவணங்களை குறிப்பிடுகின்றன:

  • ஆவணங்களின் ஒழுங்குமுறை (4.2.3)
  • பதிவுகளின் ஒழுங்குமுறை (4.2.4)
  • உட்புற ஆய்வுகள் (8.2.2)
  • நம்பகத்தன்மையற்ற விளைபொருள்/சேவையின் ஒழுங்குமுறை (8.3)
  • திருத்தும் நடவடிக்கை (8.5.2)
  • தடுப்பு நடவடிக்கை (8.5.3)

கூடுதலாக, தரக் கொள்கை மற்றும் தரக் கையேடு ஆகியவற்றை ஐஎஸ்ஓ 9001:2008 கோருகிறது (மேலே உள்ள ஆவணங்கள் சேர்க்கப்படலாம் அல்லது சேர்க்கப்படாமலும் போகலாம்).

ஒழுங்கற்ற மொழியில் காணப்படும் ஐஎஸ்ஓ 9001:2008 இன் சுருக்கம்

[தொகு]
  • தரக் கொள்கை என்பது நிர்வாகத்தில் இருந்து பெறப்படும் முறையான அறிக்கை என்பதுடன், வியாபாரம், சந்தையிடல் திட்டம் மற்றும் வாடிக்கையாளர் தேவைகள் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. தரக் கொள்கைகள் அனைத்து மட்டத்திலும் உள்ள அனைத்து ஊழியர்களாலும் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது. பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்கு, ஒவ்வொரு ஊழியருக்கும் அளவான குறிக்கோள் தேவைப்படுகிறது.
  • பதிவு செய்யப்பட்ட தகவலின் அடிப்படையில் தர அமைப்பைப் பற்றிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஒரு அமைப்பானது தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருவதுடன், சிறந்த முறையிலும், பொருத்தமான முறையிலும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
  • விளைபொருட்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கான காரணத்தைக் கண்டறிவதற்கு, மூலப்பொருட்களும், விளைபொருட்களும் எங்கே, எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்ற விவரங்களைப் பதிவுகள் தெளிவாகக் காண்பிக்க வேண்டும்.
  • வாடிக்கையாளர்களின் தேவைகள் கண்டறியப்பட வேண்டும், அத்துடன் விளைபொருட்கள் சம்பந்தமான தகவல்கள், விசாரணைகள், ஒப்பந்தங்கள், ஒழுங்குமுறைகள், எதிர்விளைவுகள் மற்றும் புகார்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களுடன் வாடிக்கையாளர்களை அணுகும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.
  • புதிய விளைபொருட்களை உருவாக்கும் போது, அதன் வளர்ச்சியின் நிலைகளைக் குறித்துத் திட்டமிட வேண்டும், அதே சமயம் ஒவ்வொரு நிலையைக் குறித்தும் பொருத்தமான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். வடிவமைப்புத் தேவைகள், ஒழுங்குமுறைத் தேவைகள், மற்றும் வாடிக்கையாளர் தேவைகள் போன்ற தேவைகளை நிறைவேற்றும் வகையில் விளைபொருட்கள் உருவாக்கப்படுகின்றனவா என்பதைப் பரிசோதித்து ஆவணம் செய்ய வேண்டும்.
  • உட்புற பரிசோதனைகள் மற்றும் சந்திப்புகள் மூலமாக நடவடிக்கைகளைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்ய வேண்டும். தர அமைப்பு சரியான முறையில் செயல்படுகின்றனவா, மற்றும் எத்தகைய திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் போன்றவற்றை முடிவு செய்ய வேண்டும். பழைய மற்றும் உள்ளார்ந்த பிரச்சினைகளை தொடர்புபடுத்த வேண்டும். மேற்கூறிய நடவடிக்கைகள் மற்றும் இறுதி முடிவுகளைப் பதிவு செய்ய வேண்டும், மேலும் அவற்றின் விளைபயனைக் கண்காணிக்க வேண்டும் (குறிப்பு: உட்புற பரிசோதனைகளுக்காக ஆவணம் செய்யப்பட்ட வழிமுறைகள் தேவைப்படுகின்றன).
  • வழக்கமான மற்றும் வழக்கத்திற்கு மாறான (வழங்குனர் மற்றும் வாடிக்கையாளர்கள் சம்பந்தமான பிரச்சினைகள், அல்லது உள்ளார்ந்த பிரச்சினைகள்) பிரச்சினைகள் தொடர்பான நடவடிக்கைகளை ஆவணம் செய்ய வேண்டும். குறைந்த தரத்திலான விளைபொருட்களை யாரும் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், மேலும் குறைந்த தரத்திலான விளைபொருட்களை என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிவதோடு, அதற்கான காரணத்தையும் ஆராய வேண்டும். பதிவுகளை உபகரணங்களைப் போன்று பயன்படுத்துவதன் மூலம் அமைப்புகளை முன்னேற்ற முடியும்.

ஆர். ஆட்னன் டிரை சுபியேன்டோவின் தர அமைப்பிற்கான கையேடு 11/15/08 அன்று திருத்தம் செய்யப்பட்டது

ஐஎஸ்ஓ 9001:2008

அட்டவணையின் பொருளடக்கம் பொருளடக்கப் பக்கம் 1.0 நோக்கம் 3 2.0 ஒழுங்குமுறைக் குறிப்பு 3 3.0 நிபந்தனைகள் மற்றும் வரையறைகள் 3 4.0 தரக் கட்டுப்பாட்டு அமைப்பு 3

4.1 பொதுவானவை 3
4.2 ஆவணம் 3

5.0 நிர்வாகப் பொறுப்பு 4

5.1 நிர்வாகத்தின் வாக்குறுதி 4
5.2 நுகர்வோர் மையம் 5
5.3 தரக் கொள்கை 5
5.4 திட்டமிடல்-தரக் குறிக்கோள்கள் 5
5.5 பொறுப்பு, அதிகாரம் மற்றும் தொடர்பு 5
5.6 நிர்வாக மதிப்பாய்வு 6

6.0 மூலவள நிர்வாகம் 6

6.1 ஆதாரத்திற்கான முன்னேற்பாடு 6
6.2 மனிதவள ஆதாரம் 6
6.3 உள்கட்டமைப்பு 7
6.4 பணிச் சூழ்நிலை 7

7.0 விளைபொருள் பகுப்பாய்வு 7

7.1 விளைபொருள் பகுப்பாய்வைத் திட்டமிடல் 7
7.2 நுகர்வோர் சம்பந்தமான நடவடிக்கைகள் 7
7.3 வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி 8
7.4 வாங்குதல் 8	
7.5 உற்பத்தி மற்றும் சேவையை வழங்குதல் 9
7.6 கண்காணிப்பு மற்றும் அளவீடு செய்யும் கருவியின் கட்டுப்பாடு 10

8.0 அளவீடு, பகுப்பாய்வு மற்றும் முன்னேற்றம் 10

8.1 பொதுவானவை 10
8.2 கண்காணிப்பு மற்றும் அளவீடு 10
8.3 நிச்சயமற்ற விளைபொருளின் கட்டுப்பாடு 11
8.4 தகவல் பகுப்பாய்வு 11
8.5 முன்னேற்றம் 12

1.0 நோக்கம்
(நோக்கத்தை இங்கே குறிப்பிடவும்)
சிறந்த திட்டமிடப்பட்ட தரக் கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்டிருப்பதன் மூலம், வாடிக்கையாளரின் தேவைகள், மற்றும் சட்டரீதியான ஒழுங்குமுறைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் விளைபொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்த இயலும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்), மேலும் இதன் காரணமாக ஒரு நிறுவனம் தனது திறமையை தெளிவாக விவரிக்க இயலும். தொடர்ந்த முன்னேற்றம் மற்றும் பொருத்தமற்ற நடவடிக்கைகளைத் தவிர்ப்பது போன்றவற்றுடன் சிறந்த அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் நுகர்வோரின் மனநிறைவுக்கு உத்திரவாதம் அளிக்க இயலும். விளைபொருள் மற்றும் தனித்தன்மை (நிறுவன மேற்பார்வையில்) ஆகியவற்றின் காரணமாக, ஐஎஸ்ஓ 9001:2008 இன் தேவைகளைப் பயன்படுத்துவதை 7.3 வடிவமைப்பு மற்றும் முன்னேற்றப் பிரிவு தவிர்த்து வருகிறது (நிறுவனத்தின் மேற்பார்வையில்). வாடிக்கையாளர்கள் அல்லது அவர்களின் ஆலோசகர்கள் ஆகியோரால் விளைபொருட்களின் முக்கிய சிறப்பியல்புகள் வரையறை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளரின் தேவைகள் மற்றும் சட்டரீதியான ஒழுங்குமுறைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் விளைபொருட்களை அளிப்பதற்கான இதுபோன்ற விதிவிலக்குகள் ஒரு நிறுவனத்தின் திறமை அல்லது பொறுப்புகளை பாதிப்பதில்லை.
2.0 ஒழுங்குமுறைக் குறிப்பு
இந்தப் புத்தகத்தில் உள்ள குறிப்புகள் மற்றும் ஐஎஸ்ஓ 9001:2008 இன் சட்டபூர்வ அதிகாரம் ஆகியவற்றை பின்வரும் ஒழுங்குமுறை ஆவணம் கொண்டிருக்கிறது. தேதி குறிப்பிடப்பட்ட குறிப்புகள், அதைத் தொடர்ந்து வரும் திருத்தம், அல்லது பிரசுரங்களின் மறுபதிப்பு போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இருந்தபோதும், பின்வரும் ஒழுங்குமுறை ஆவணத்தின் புதிய பதிப்பைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு ஐஎஸ்ஓ 9001:2008 ஐ அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தப் பிரிவுகள் ஊக்கப்படுத்தப்படுகின்றன. தேதி குறிப்பிடப்படாத குறிப்புகளைப் பெறுவதற்காக, ஒழுங்குமுறை ஆவணத்தின் புதிய பதிப்பு கோரிக்கையை எழுப்புகிறது.
ஐஎஸ்ஓ 9000: 2005 தரக் கட்டுப்பாட்டு அமைப்பு – அடிப்படை மற்றும் சொற்களஞ்சியம்.
3.0 நிபந்தனைகள் மற்றும் வரையறைகள்
“வழங்குனர்” மற்றும் “விற்பனையாளர்” இருவரும் ஒருவரே என்பதுடன், வாங்கப்பட்ட விளைபொருட்களைப் பெறுவதற்கு இருவரும் வெளிப்புற ஆதாரத்தைத் தேடுகின்றனர் (நிறுவனத்தின் மேற்பார்வையில்).
4.0 தரக் கட்டுப்பாட்டு அமைப்பு
4.1 பொதுவான தேவைகள்
தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆவணம் செய்யப்படுவதுடன், அமலாக்கம் செய்யப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருகிறது (நிறுவனத்தின் மேற்பார்வையில்). ஐஎஸ்ஓ 9001:2008 சர்வதேச தரநிலைகளின் தேவைகளுக்கு ஏற்ப தரக் கட்டுப்பாட்டு அமைப்பு சிறந்த முறையில் மேம்படுத்தப்படுகிறது.
(நிறுவனத்தின் மேற்பார்வையில்):
எ) தரக் கட்டுப்பாட்டு அமைப்பிற்குத் தேவைப்படும் நடவடிக்கைகள் கண்டறியப்படுவதுடன், அவற்றின் முழுப் பயன்பாடும் வரையறுக்கப்படுகிறது (நிறுவனத்தின் மேற்பார்வையில்),
பி) இந்த நடவடிக்கைகளின் விளைவுகள் மற்றும் பாதிப்புகள் கணிக்கப்படுகின்றன,
சி) இந்த நடவடிக்கைகளின் செயல்முறை மற்றும் கட்டுப்பாட்டை பயனுள்ளதாக மாற்றுவதற்குத் தேவைப்படும் அளவீடுகள் மற்றும் வழிமுறைகள் உறுதி செய்யப்படுகின்றன,
டி) இந்த நடவடிக்கைகள் சம்பந்தமான செயல்பாடு மற்றும் கண்காணிப்பை ஆதரிப்பதற்குத் தேவைப்படும் மூலாதாரம் மற்றும் தகவல்களை எளிதில் கிடைக்கும்படிச் செய்வதற்கான வழிவகை மேற்கொள்ளப்படுகிறது,
இ) பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதுடன், மதிப்பாய்வு செய்யப்படுகிறது,
எஃப்) திட்டமிடப்பட்ட முடிவுகள் மற்றும் மேற்கூறிய நடவடிக்கைகளின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அடைவதற்குத் தேவைப்படும் செயல்பாடுகள் நிறைவேற்றப்படுகிறது,
ஐஎஸ்ஓ 9001:2008 சர்வதேச தரநிலைகளின் தேவைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் (நிறுவனத்தின் மேற்பார்வையில்) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் அயலாக்கம் செய்வதற்குத் (நிறுவனத்தின் மேற்பார்வையில்) தேர்ந்தெடுக்கப்படும் போது, அது தேவைகளுடன் கூடிய விளைபொருட்களின் நம்பகத்தன்மையை பாதிப்பதுடன், அது போன்ற நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாட்டை உறுதி செய்கின்றது. இதுபோன்ற அயலாக்கம் செய்யப்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தமான கட்டுப்பாட்டு வகைகள் மற்றும் விரிவாக்கம் தரக் கட்டுப்பாட்டு அமைப்பினுள் கண்டறியப்படுகிறது.
குறிப்பு: நிர்வாகச் செயல்பாடுகள், மூலாதாரத்தை வழங்குதல், விளைபொருள் ஆராய்ச்சி, அளவீடு, பகுப்பாய்வு, மற்றும் முன்னேற்றம் உள்ளிட்ட மேலே குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பைச் செயல்படுத்துவதற்குத் தேவைப்படுகின்றன.

4.2 ஆவணத் தேவைகள்
4.2.1 பொதுவானவை
தரக் கட்டுப்பாட்டு ஆவணங்கள் கீழ்கண்டவற்றை உள்ளடக்கியது:
எ) தரக் கொள்கை மற்றும் தரக் குறிக்கோள்கள் ஆகியவற்றின் அறிக்கை தொடர்பான ஆவணங்கள்,
பி) தரக் கையேடு,
சி) ஐஎஸ்ஓ 9001:2008 சர்வதேச தரநிலைக்குத் தேவைப்படும் நடவடிக்கைகள் மற்றும் பதிவுகள் தொடர்பான ஆவணங்கள்,
டி) சிறந்த திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் சம்பந்தமான கட்டுப்பாடுகளுக்கு உத்திரவாதம் அளிக்கத் தேவைப்படும் பதிவுகள் (நிறுவனத்தின் மேற்பார்வையில் தேர்ந்தெடுக்கப்பட்டது) மற்றும் ஆவணங்கள்
குறிப்பு 1: ஐஎஸ்ஓ 9001:2008 என்பது சர்வதேச தரநிலையில் “பதிவுசெய்யப்பட்ட நடவடிக்கை” என்பதுடன், அந்த நடவடிக்கை நிறுவப்பட்டு, ஆவணம் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருவது தெளிவாக விளக்கப்படுகிறது.
குறிப்பு 2: ஆவணம் எந்த ஒரு வடிவத்தையோ அல்லது எந்த ஒரு சராசரிப் பிரிவையோ சார்ந்ததாக இருக்கலாம்.
4.2.2 தரக் கையேடு
தரக் கையேடை நிறுவி, நிர்வகிக்கும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்) சில காரணிகள் பின்வருமாறு
எ) விலக்குதலுக்கான காரணங்களின் விவரங்களை உள்ளடக்கிய தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் குறிக்கோள்,
பி) தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, அல்லது அவற்றைப் பற்றிய குறிப்புகளை நிறுவுவதற்கான பதிவுசெய்யப்பட்ட நடவடிக்கைகள், மற்றும்
சி) தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நடவடிக்கைகளுக்கு இடையேயான விளைவுகளின் வரையறை.
4.2.3 ஆவணங்களின் கட்டுப்பாடு
தரக் கட்டுப்பாட்டு அமைப்பினால் கோரப்படும் ஆவணங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. தரக் கட்டுப்பாட்டு அமைப்பினால் கோரப்படும் பதிவுகள் 4.2.4 ஆம் பிரிவில் தரப்பட்டுள்ள தேவைகளுக்கு ஏற்றார் போல வரையறை செய்யப்படுகின்றன. தேவைப்படும் கட்டுப்பாடுகளை வரையறை செய்வதற்கு பதிவு செய்யப்பட்ட நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
எ) பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பாக போதுமான ஆவணங்களுக்கு அனுமதி அளிப்பது,
பி) தேவைப்படும் ஆவணங்களை மதிப்பாய்வு செய்து, திருத்தம் செய்வதுடன், மற்றும் மறுபரிசீலனை செய்வது,
சி) மாற்றம் மற்றும் திருத்தம் செய்யப்பட்ட ஆவணங்கள் சரியான முறையில் கண்டறியப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வது,
டி) பயன்பாட்டின் போது, பொருத்தமான பதிப்பிலான ஆவணங்கள் கிடைக்கப்பெறுகின்றதா என்பதை உறுதி செய்வது,
இ) எஞ்சியிருக்கும் ஆவணங்கள் விரைவாகப் புரிந்துகொள்ளும்படி இருக்கின்றனவா என்பதை உறுதி செய்வது,
எஃப்) தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் திட்டம் மற்றும் செயல்பாடுகளின் தேவைகளுக்காக நிறுவனத்தால் கண்டறியப்படும் வெளிப்புற ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் சரியான முறையில் அடையாளம் காணப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதுடன், அவற்றின் பங்கீடுகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்,
ஜி) நடைமுறையில் இல்லாத ஆவணங்களை எந்த விதத் திட்டமுமின்றி பயன்படுத்துவதைத் தடை செய்வது, அதே சமயம் அந்த ஆவணங்கள் ஏதாவது ஒரு நோக்கத்திற்காக பாதுகாக்கப்பட்டால், பொருத்தமான அணுகுமுறையை மேற்கொள்வது.
உதவி ஆவணம்
கியூஓபி-42-01 ஆவணங்களின் கட்டுப்பாடு
4.2.4 பதிவுகளின் கட்டுப்பாடு
தேவைகளுக்கு ஏற்ப ஆதாரங்களை வழங்குவதற்கும், தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் சிறந்த நடவடிக்கைகளை வரையறை செய்வதற்கும் பதிவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. அடையாளம் காணுதல், சேமிப்பு, பாதுகாப்பு, மீட்பு, பயன்படுத்தும் காலம் மற்றும் பதிவுகளை ஒழுங்குபடுத்துவது ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவைப்படும் வரையறை செய்யப்பட்ட பதிவுகள் தொடர்பான நடவடிக்கைகளை (நிறுவனத்தின் மேற்பார்வையில்) மேற்கொள்வது. பதிவுகளைத் தெளிவாகவும், சுலபமாகக் கண்டறியும் வகையிலும் வைத்திருப்பதோடு, எளிதில் மீட்கும்படியாகவும் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.
உதவி ஆவணம்
கியூஓபி-42-02 ஆவணங்களின் கட்டுப்பாடு
5.0 நிர்வாகப் பொறுப்புகள்
5.1 நிர்வாக வாக்குறுதி
உயர்மட்ட நிர்வாகம் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் வளர்ச்சி மற்றும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்பதுடன், பின்வரும் காரணிகள் மூலம் அதைச் சிறந்த முறையில் மேம்படுத்துகிறது:
எ) வாடிக்கையாளரின் தேவைகள் மற்றும் சட்டரீதியான தேவைகளின் முக்கியத்துவத்தை தொடர்புபடுத்துவது (நிறுவனத்தின் மேற்பார்வையில்),
பி) தரக் கொள்கையை நிறுவுதல்,
சி) தரக் குறிக்கோள்களை நிறுவுதல்,
டி) நிர்வாக சம்பந்தமான மதிப்பாய்வுகளை மேற்கொள்ளுதல், மற்றும்
இ) மூலாதாரங்களின் பயன்பாட்டினை உறுதி செய்தல்.


5.2 வாடிக்கையாளரை மையப்படுத்துதல்
உயர்மட்ட நிர்வாகம் வாடிக்கையாளரின் தேவைகளைக் கண்டறிவதுடன், நுகர்வோரின் மன நிறைவை மேம்படுத்தும் குறிக்கோளை அடைய வழிசெய்கிறது. (7.2.1 மற்றும் 8.2.1 பிரிவுகளைப் பார்க்கவும்)
5.3 தரக் கொள்கை
"தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நடவடிக்கை மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் மூலம் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பைத் தாண்டிய தேவைகளைப் பூர்த்தி (நிறுவனத்தின் மேற்பார்வையில்) செய்ய இயலும். சிறந்த விளைபொருளை சரியான நேரத்தில் மலிவான விலையில் அளிப்பதன் மூலம் வாடிக்கையாளரின் முழுமையான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலும்.”
உயர்மட்ட நிர்வாகம் தரக் கொள்கைக்கு உறுதி அளிக்கிறது
எ) அது தரக் கொள்கையின் குறிக்கோளுக்கு பொருத்தமானதாகும்,
பி) அது தேவைகளுடன் கூடிய நடவடிக்கைகளுக்கு உறுதி அளிப்பதுடன், தரக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் சிறப்புகளை மேம்படுத்துகிறது,
சி) இது தரக் குறிக்கோள்களை நிறுவுவதற்கும், மதிப்பாய்வு செய்வதற்குமான கட்டமைப்பை அளிக்கிறது,
டி) இதை எல்லைக்குட்பட்டு (நிறுவனத்தின் மேற்பார்வையில்) தொடர்பு கொள்ள இயலும் என்பதுடன், புரிந்துகொள்ளவும் இயலும்
இ) இதைப் பொருத்தமான முறையில் தொடர்ந்து மதிப்பாய்வு செய்ய இயலும்.
5.4 திட்டமிடல்
5.4.1 தரக் குறிக்கோள்கள்
விளைபொருளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது [7.1 எ பிரிவைப் பார்க்கவும்] உள்ளிட்ட தரக் குறிக்கோள்கள் வரையறுக்கப்பட்ட எல்லைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உயர்மட்ட நிர்வாகம் (நிறுவனத்தின் மேற்பார்வையில்) உறுதி செய்ய வேண்டும். அளவீடு செய்யப்பட்ட மற்றும் பொருத்தமான தரக் குறிக்கோள்கள் தரக் கொள்கைகளுடன் இணக்கமாக இருத்தல் வேண்டும்.
1. சிறந்த தொடர்புகளை ஏற்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் தேவைகளை மதிப்பாய்வு செய்தல் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலும்.
2. உயர்ந்த தரத்திலான விளைபொருட்கள் மற்றும் சேவைகளைப், பொருத்தமான விலையில், சரியான நேரத்தில் வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்ய வேண்டும்.
3. வாடிக்கையாளர்களுக்கு மன நிறைவை அளிப்பதற்கு, நாம் விளைபொருட்கள், நடவடிக்கைகள் மற்றும் சேவைகளைச் சிறப்பான முறையில் நிர்வகிக்க வேண்டும்.
4. பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை அளிப்பதோடு, பயிற்சி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றின் மூலம் ஊழியர்களைச் சிறந்த முறையில் மேம்படுத்த முடியும்.

5.4.2 தரக் கட்டுப்பாட்டு அமைப்பைத் திட்டமிடல்

உயர்மட்ட நிர்வாகம் கீழ்கண்டவற்றிற்கு உறுதி அளிக்க வேண்டும்:
எ) 4.1 பிரிவில் அளிக்கப்பட்டுள்ள தேவைகள் மற்றும் தரக் கொள்கைகள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்யும் வகையில் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்,
பி) தரக் கட்டுப்பாட்டு அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டத்தைச் செயல்படுத்தும்போது, தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நேர்மையை நிலைநிறுத்த வேண்டும்.
5.5 பொறுப்பு, அதிகாரம் மற்றும் தொடர்பு
5.5.1 பொறுப்பு மற்றும் அதிகாரம்
தரக் கட்டுப்பாட்டு அமைப்பைச் சிறந்த முறையில் மேம்படுத்துவதற்கு, பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களை வரையறை செய்வதுடன், அவற்றைச் சிறந்த முறையில் பகிர்ந்து கொள்ள (நிறுவனத்தின் மேற்பார்வையில்) உயர்மட்ட நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும். கியூஎம்எஸை பாதிக்கும் செயல்பாடுகளை நிர்வகித்து, செயல்படுத்தித், திருத்தம் செய்யும் நபரின் பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களை அமைப்பு அட்டவணை வரையறை செய்கிறது. தர நிலைகளில் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்களை நிர்வாக மதிப்பாய்வு வரம்பிற்குட்பட்டு செயல்படுத்த வேண்டும். விளைபொருள், நடவடிக்கை, கொள்ளளவு, மற்ற செயல்பாடுகள் அல்லது நிர்வாக வேறுபாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு இத்தகைய மாற்றங்களே காரணமாக அமைகிறது என்பதுடன், தர அமைப்பின் சிறப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் காரணமாகிறது.
உதவி ஆவணம்
நிறுவன விளக்க வரைபடம்
5.5.2 நிர்வாகப் பிரதிநிதி
உயர்மட்ட நிர்வாகம் மற்ற பொறுப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் செயல்படும் நபரை அமைப்பு நிர்வாகத்தின் உறுப்பினராக நியமிக்கிறது, மேலும் அது பின்வரும் பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது
எ) தரக் கட்டுப்பாட்டு அமைப்பிற்குத் தேவைப்படும் நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு, செய்து முடிக்கப்படுவதுடன், அவற்றை நிர்வகிப்பதற்கும் உறுதி அளிப்பது,
பி) தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் செயல்பாடுகளை உயர்மட்ட நிர்வாகத்திற்குத் தெரிவிப்பது, முன்னேற்றம் குறித்து விளக்கம் அளிப்பது
சி) வாடிக்கையாளர்களின் தேவைகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த (நிறுவனத்தின் மேற்பார்வையில்) உறுதியளிப்பது.
குறிப்பு: தரக் கட்டுப்பாட்டு அமைப்புகள் தொடர்பான விவகாரங்களில் வெளிப்புற குழுக்களை இணைப்பது உள்ளிட்டவை நிர்வாகப் பிரதிநிதியின் பொறுப்புகளாகக் கருதப்படுகின்றன.
5.5.3 உட்புற தொடர்புகள்
உயர்மட்ட நிர்வாகம் பொருத்தமான தகவல் பரிமாற்ற நடவடிக்கைகளை (நிறுவனத்தின் மேற்பார்வையில்) மேற்கொள்துவதுடன், தகவல் பரிமாற்றத்தின் மூலம் தரக் கட்டுப்பாட்டு அமைப்பைச் சிறந்த முறையில் மேம்படுத்தி வருகிறது.
5.6 நிர்வாக மதிப்பாய்வு
5.6.1 பொதுவானவை
உயர்மட்ட நிர்வாகம் சீரான இடைவெளியில் தரக் கட்டுப்பாட்டு அமைப்பை மதிப்பாய்வு (நிறுவனத்தின் மேற்பார்வையில்) செய்வதுடன், அதன் தகுதி, நம்பகத்தன்மை மற்றும் சிறப்புகளுக்கு உறுதி அளிக்கிறது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது, தரக் கொள்கை மற்றும் தரக் குறிக்கோள்கள் உள்ளிட்ட தரக் கட்டுப்பாட்டு அமைப்பிற்குத் தேவைப்படும் மாற்றங்களைக் கண்டறிவது ஆகியவற்றை இந்த மதிப்பாய்வுகள் உள்ளடக்கியுள்ளது. நிர்வாக மதிப்பாய்வில் இருந்து பெறப்படும் பதிவுகள் சிறப்பான முறையில் பாதுகாக்கப்படுகின்றன (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்).
உதவி ஆவணம்
கியூஓபி-56-01 நிர்வாக மதிப்பாய்வு
5.6.2 மதிப்பாய்வு உள்ளீடு
பின்வரும் தகவல்கள் நிர்வாக மதிப்பாய்விற்கு உள்ளீடுகளாகப் பயன்படுகின்றன:
எ) பரிசோதனைகளின் முடிவுகள்
பி) வாடிக்கையாளர்களின் கருத்துக்கள்,
சி) செயல்முறைகளின் தரம் மற்றும் விளைபொருளின் நம்பகத்தன்மை,
டி) பொருத்தமான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் நிலை,
இ) முந்தைய நிர்வாக மதிப்பாய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்,
எஃப்) தரக் கட்டுப்பாட்டு அமைப்பை பாதிக்கும் மாற்றங்கள், மற்றும் ஜி) முன்னேற்றத்திற்கான பரிந்துரைகள்.
5.6.3 மதிப்பாய்வு வெளியீடு
நிர்வாக மதிப்பாய்வில் இருந்து பெறப்படும் வெளியீடு பின்வரும் எந்த முடிவுகளையோ அல்லது நடவடிக்கைகளையோ சார்ந்திருக்கலாம்:
எ) தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் சிறப்புகள் மற்றும் அதன் நடவடிக்கைகளின் முன்னேற்றம்,
பி) வாடிக்கையாளர் தேவைகளுடன் தொடர்புடைய விளைபொருளின் முன்னேற்றம், மற்றும்
சி) மூலாதாரத் தேவைகள்.
6.0 மூலவள நிர்வாகம்
6.1 மூலாதாரத்தை வழங்குதல்
தேவைப்படும் ஆதாரங்களைக் கண்டறிந்து, வழங்குவது (நிர்வாகத்தின் மேற்பார்வையில்)
எ)தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நடவடிக்கைகளை நிர்வகிப்பதுடன், அதன் செயல்திறனை தொடர்ந்து மேம்படுத்துதல் மற்றும் பி) வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களுக்கு மன நிறைவை அளிக்க முடியும்.
6.2 மனித வள ஆதாரம்
6.2.1 பொதுவானவை
பொருத்தமான அறிவு, பயிற்சி, திறமை மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் விளைபொருட்களின் தேவைகளைப் பாதிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்தல் வேண்டும்.
6.2.2 திறமை, பயிற்சி, மற்றும் விழிப்புணர்வு
(நிறுவனத்தின் மேற்பார்வையில்) :
எ) விளைபொருட்களின் தேவைகளைப் பாதிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்தல்,
பி) அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, சிறந்த பயிற்சியை அளிப்பதுடன், மற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல்,
சி) எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மதிப்பாய்வை மேற்கொள்ளுதல்,
டி) அமைப்பின் நடவடிக்கைகள் மற்றும் முக்கியத்துவத்தைக் குறித்த விழிப்புணர்வு அதன் தனிப்பட்ட பிரிவாகக் கருதப்படுகிறது, மேலும் அந்த நடவடிக்கைகள் எவ்வாறு தரக் குறிக்கோள்களை நிறைவேற்ற உதவுகின்றன என்பதை உறுதி செய்தல் வேண்டும்,
இ) கல்வி, பயிற்சி, திறமை மற்றும் அனுபவம் (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்) ஆகியவற்றைப் பற்றிய பதிவுகளைப் பாதுகாப்பது.
உதவி ஆவணம்
கியூஓபி-62-01 தகுதி, பயிற்சி, மற்றும் விழிப்புணர்வு
6.3 உள்கட்டமைப்பு
விளைபொருளின் தேவைகளை நிறைவேற்றுவதற்குத், தேவைப்படும் உள்கட்டமைப்பைக் கண்டறிவது (நிறுவனத்தின் மேற்பார்வையில்), அளிப்பது, மற்றும் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். உள்கட்டமைப்பு பின்வரும் பயன்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது:
எ) கட்டமைப்புகள், பணியிடம் மற்றும் சேவைத் தொடர்புகள்,
பி) செயல்முறைச் சாதனம் (வன்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டிற்கும்) மற்றும்
சி) உதவிச் சேவைகள் (போக்குவரத்து, தகவல் தொடர்பு அல்லது தகவல் அமைப்பு).
உதவி ஆவணம்
கியூஓபி-63-01 உபகரணப் பாதுகாப்பு
6.4 பணிச் சூழல்
விளைபொருளின் தேவைகளை நிறைவேற்றுவதற்குத், தேவைப்படும் பணிச் சூழல் கண்டறியப்படுவதுடன் (நிறுவனத்தின் மேற்பார்வையில்), நிர்வகிக்கப்படுகிறது.
7.0 விளைபொருள் ஆய்வு
7.1 விளைபொருள் ஆய்விற்குத் திட்டமிடல்
விளைபொருள் ஆய்விற்குத் தேவைப்படும் நடவடிக்கைகள் திட்டமிடப்படுவதுடன் (நிறுவனத்தின் மேற்பார்வையில்), முன்னேற்றப்படுகிறது. விளைபொருள் ஆய்வுத் திட்டம் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் மற்ற நடவடிக்கைகளின் தேவைகளுக்கு ஏற்றார் போல் இருக்கிறது (4.1 ஆம் பிரிவைப் பார்க்கவும்). விளைபொருள் ஆய்வைப் பற்றிய திட்டம் (நிறுவனத்தின் மேற்பார்வையில்), பின்வரும் நடவடிக்கைகளை உள்ளடக்கியது:
எ) விளைபொருளுக்கான தரக் குறிக்கோள்கள் மற்றும் தேவைகள்,
பி) விளைபொருளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அதற்குத் தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை அளித்தல்,
சி) சரிபார்த்தல், உறுதிப்பாடு, கண்காணிப்பு, அளவீடு, ஆய்வு மற்றும் பரிசோதனை போன்ற நடவடிக்கைகள் விளைபொருளை உருவாக்குவதற்கும், அவற்றை அங்கீகரிப்பதற்கும் தேவைப்படுகிறது,
டி) நடவடிக்கைகளை ஆய்வு செய்வது, தேவைகளைப் பூர்த்தி செய்யும் விளைபொருளைப் பெறுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆதாரங்களை வழங்கும் பதிவுகள் தேவைப்படுகின்றன (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்).
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்றார் போல, திட்டமிடுதலின் வெளியீடு இருத்தல் வேண்டும்.
குறிப்பு 1: தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (விளைபொருளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை உள்ளடக்கியது) நடவடிக்கைகளைக் குறிப்பிடும் ஆவணம், விளைபொருள், திட்டம் அல்லது ஒப்பந்தங்களுக்கு வழங்கப்படும் ஆதாரங்கள் போன்றவை தரத் திட்டம் என்றழைக்கப்படுகின்றது. குறிப்பு 2: விளைபொருள் ஆய்வு நடவடிக்கைகளின் முன்னேற்றத்திற்கு, 7.3 ஆம் பிரிவில் அளிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பயன்படுத்தவும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்). உதவி ஆவணம்

கியூஓபி-71-01 விளைபொருள் ஆய்வைக் குறித்துத் திட்டமிடல்
7.2 வாடிக்கையாளர்- தொடர்பான நடவடிக்கைகள்
7.2.1 விளைபொருள் தொடர்பான தேவைகளைக் கண்டறிதல்
பின்வருவனவற்றை வரையறை செய்யவும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்):
எ) விநியோக மற்றும் காலம் கடந்த விநியோக நடவடிக்கைகள் தொடர்பான தேவைகள் வாடிக்கையாளரால் குறிப்பிடப்படும் தேவைகளாகும்,
பி) தேவைகள் வாடிக்கையாளர்களால் குறிப்பிடப்படுவதில்லை, ஆனால் குறிப்பிட்ட நோக்கத்திற்காக அல்லது திட்டத்திற்காக தேவைகளைக் குறிப்பிடுவது அவசியமாகிறது,
சி) சட்ட ஒழுங்கு ரீதியான நிபந்தனைகளுடன் விளைபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, மேலும்
டி) கூடுதலான நிபந்தனைகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்).
உதவி ஆவணம்
கியூஓபி-72-02 ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் மதிப்பாய்வு
7.2.2 விளைபொருள் தொடர்பான தேவைகளின் மதி்ப்பாய்வு
விளைபொருள் தொடர்பான தேவைகள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்). முன்னதாக வாடிக்கையாளர்களுக்கு (உதாரணமாக, ஒப்பந்தப் படிவத்தை அளித்தது, ஒப்பந்தங்கள் மற்றும் கோரிக்கைகளை அங்கீகரித்தது, ஒப்பந்தங்கள் மற்றும் கோரிக்கைகளில் மாற்றங்களை ஏற்றுக்கொண்டது) விளைபொருளை வழங்குவதாக உறுதியளித்ததன் காரணமாக இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுகின்றது (நிறுவனத்தின் மேற்பார்வையில்) என்பதுடன், அந்த மதிப்பாய்வு பின்வருவனவற்றை உறுதி செய்ய வேண்டும்:
எ) விளைபொருளுக்கான தேவைகளை வரையறை செய்ய வேண்டும்,
பி) மேலே வரையறுக்கப்பட்டதில் இருந்து வேறுபடும் ஒப்பந்தம் அல்லது கோரிக்கை தொடர்பான நிபந்தனைகளுக்குத் தீர்வு காண்பது, மற்றும்
சி) வரையறுக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திறனைக் கொண்டிருப்பது (நிறுவனத்தின் மேற்பார்வையில்).
மதிப்பாய்வின் முடிவுகள் தொடர்பான பதிவுகள் மற்றும் மதிப்பாய்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றன (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்). தேவைகள் குறித்த பதிவு செய்யப்பட்ட அறிக்கையை வாடிக்கையாளர் அளிக்காத போது, அங்கீகாரம் அளிப்பதற்கு முன்பாக வாடிக்கையாளரின் தேவைகள் உறுதி செய்யப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்). விளைபொருள் தொடர்பான தேவைகளில் திருத்தம் செய்யும் போது, அது தொடர்பான ஆவணங்கள் சரியான முறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதோடு, அதன் உரிமையாளர் திருத்தப்பட்ட தேவைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கின்றாரா எனபதையும் உறுதி செய்ய வேண்டும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்).
குறிப்பு: சில சந்தர்ப்பங்களில், ஒவ்வொரு கோரிக்கைக்கும் மதிப்பீடு செய்வது என்பது சாத்தியமற்றதாகும். மதிப்பாய்விற்கு மாற்றாக, அட்டவணை அல்லது விளம்பரப்படுத்தும் உபகரணம் உள்ளிட்டவை விளைபொருள் தொடர்பான தகவல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.
உதவி ஆவணம்
கியூஓபி-72-02 ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் மதிப்பாய்வு
7.2.3 வாடிக்கையாளர் தொடர்பு
கீழ்காணும் கூற்றுகளின் மூலம் வாடிக்கையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்):
எ) விளைபொருள் தொடர்பான தகவல்கள்,
பி) திருத்தங்களை உள்ளடக்கிய ஒப்பந்தங்கள் அல்லது கோரிக்கைகளைக் கையாளுவது தொடர்பான விசாரணைகள், மற்றும்
சி) வாடிக்கையாளர் புகார்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களின் அபிப்பிராயங்கள்.
உதவி ஆவணம்
கியூஓபி-72-02 ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் மதிப்பாய்வு
கியூஓபி-85-02 வாடிக்கையாளர் புகார்கள்
7.3 வடிவமைப்பு மற்றும் வளர்ச்சியைத் தவிர்த்தது (1.0 பிரிவில் உள்ள நோக்கத்தைப் பார்க்கவும்)
7.4 வாங்குதல்
7.4.1 வாங்கும் செயல்முறை
தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வாங்கப்பட்ட விளைபொருட்கள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்தல் (நிறுவனத்தின் மேற்பார்வையில்) வேண்டும். வழங்குனர் மற்றும் வாங்கப்பட்ட விளைபொருட்களுக்கு வழங்கப்படும் ஒழுங்குமுறைகளின் அளவானது, விளைபொருள் பரிசோதனை அல்லது விளைபொருளின் இறுதி வடிவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
உதவி ஆவணம்
கியூஓபி-74-01 வாங்குதல்
7.4.2 வாங்குவது தொடர்பான விவரங்கள்
வாங்குவது தொடர்பான விவரங்கள் சரியான முறையில் வாங்கப்பட்ட விளைபொருட்களைப் பற்றிய வரையறையைக் கொண்டுள்ளது
எ) விளைபொருள், வழிமுறைகள், நடவடிக்கைகள் மற்றும் உபகரணங்களின் அங்கீகாரத்திற்கான தேவைகள்,
பி) வாடிக்கையாளர் தகுதி பெறுவதற்கான நிபந்தனைகள், மற்றும்
சி) தரக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கான தேவைகள். வழங்குனரைத் தொடர்பு கொள்வதற்கு முன்பாக, வாங்குவது தொடர்பான நிபந்தனைகள்
போதுமான அளவிற்கு வரையறை செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்). உதவி ஆவணம்
கியூஓபி-74-01 வாங்குதல்
7.4.3. வாங்கப்பட்ட விளைபொருளின் உறுதிப்பாடு
வாங்கப்பட்ட விளைபொருட்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்வதற்குத் தேவைப்படும் பரிசோதனைகள் அல்லது மற்ற நடவடிக்கைகளை (நிறுவனத்தின் மேற்பார்வையில்) உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளர் குறிப்பிட்ட நோக்கத்திற்காக வழங்குனரின் நடவடிக்கைகளைப் பரிசோதனை செய்யும்போது (நிறுவனத்தின் மேற்பார்வையில்), பரிசோதனைக்கான முன்னேற்பாடு மற்றும் விளைபொருளை வெளியிடும் வழிமுறை போன்றவற்றை ஆவணத்தில் தெளிவாகக் குறிப்பிட (நிறுவனத்தின் மேற்பார்வையில்) வேண்டும்.
உதவி ஆவணம்
கியூஓபி-74-02 வாங்கப்படும் விளைபொருளுக்கான பரிசோதனை

7.5 உற்பத்தி மற்றும் சேவையை வழங்குதல்
7.5.1 உற்பத்தி மற்றும் சேவையை வழங்குவதற்கான கட்டுப்பாடு
உற்பத்தி மற்றும் சேவையை வழங்குதல் போன்றவை நிபந்தனைகளுக்கு உட்பட்டு திட்டமிடப்படுவதுடன், சிறந்த முறையில் பயன்படும்படியாக மாற்றப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்). அத்தகைய நிபந்தனைகள் பின்வருமாறு:
எ) தகவல்களின் பயன்பாடு விளைபொருளின் சிறப்பியல்புகளை விவரிக்கும்படியாக இருக்கிறது,
பி) பணிகள் தொடர்பான தகவல்களை எளிதில் கிடைக்கும்படி செய்தல்,
சி௦) பொருத்தமான உபகரணத்தைப் பயன்படுத்துதல்,
டி) கண்காணிப்பு மற்றும் அளவீடு செய்யும் உபகரணங்களை எளிதில் கிடைக்கும்படி செய்வது,
இ) கண்காணிப்பு மற்றும் அளவீட்டு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல்,
எஃப்) விளைபொருள் வெளியீடு, விநியோகம் மற்றும் தாமத விநியோக நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல்.
உதவி ஆவணம்
கியூஓபி-75-01 பணி ஒழுங்குமுறை மற்றும் விளைபொருள் தொடர்பான பதிவுகள்
கியூஓபி-63-01 உபகரணங்களை நிர்வகித்தல்
கியூஓபி-76-01 அளவீடு மற்றும் கண்காணிப்பு உபகரணம்
கியூஓபி-84-02 இறுதிப் பரிசோதனை
கியூஓபி-75-06 ஏற்றுமதி
7.5.2 உற்பத்தி மற்றும் சேவை வழங்குதல் தொடர்பான நடவடிக்கைகளின் உறுதிப்பாடு
கண்காணிப்பு மற்றும் அளவீடு ஆகியவற்றினால் வெளியீட்டு முடிவை ஆய்வு செய்யாதபோது, உற்பத்தி மற்றும் சேவையை அளிப்பதற்கான செயல்முறைகள் பரிசோதிக்கப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்). மேலும் விளைபொருளைப் பயன்படுத்தும் போது அல்லது சேவைகளை விநியோகித்த பிறகு, அந்தச் செயல்முறைகளின் விளைவுகளைப் போன்று, அதன் குறைபாடுகளும் வெளிப்படுத்தப்படுகின்றன. திட்டமிடப்பட்ட முடிவுகளை அடைவதற்கான திறனை இத்தகைய செயல்முறைகள் கொண்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த செயல்முறைகளுக்காக பின்வரும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்):
எ) மதிப்பாய்விற்கான வரையறை மற்றும் நடவடிக்கைகளின் அங்கீகாரம்,
பி) உபகரணங்களை அனுமதித்தல் மற்றும் வாடிக்கையாளரின் தகுதி,
சி) குறிப்பிட்ட வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகளின் பயன்பாடு,
டி) பதிவிற்கான தேவைகள் (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்), மற்றும்
இ) மறுசீரமைப்பு.

குறிப்பு: இந்தச் சமயத்தில் சிறப்பான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை (நிறுவனத்தின் மேற்பார்வையில்).
7.5.3 அங்கீகரித்தல் மற்றும் கண்டறிதல்
பொருத்தமான விளைபொருளைக் கண்டறியும் ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம், சிறந்த விளைபொருளை அடையாளம் காண இயலும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்). விளைபொருளை ஆய்வு செய்யும் போது, தேவைகளைக் கண்காணித்து அளவிடுவதன் மூலம் விளைபொருளின் நிலையை அறிந்துகொள்ள இயலும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்). கண்டறிதல் நிபந்தனையாக இருக்கும் பட்சத்தில், விளைபொருள் சிறந்த முறையில் அடையாளம் காணப்படுகிறது என்பதுடன், அது தொடர்பான பதிவுகள் பாதுகாக்கப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்) (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்).
உதவி ஆவணம்
கியூஓபி-75-04 விளைபொருள் அங்கீகாரம் மற்றும் கண்டறியும் ஆய்வு
7.5.4 வாடிக்கையாளரின் சொத்துக்கள்
வாடிக்கையாளரின் சொத்துக்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் போதோ அல்லது பயன்பாட்டில் இருக்கும் போதோ, அவைகள் சிறந்த முறையில் பாதுகாக்கப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்). வாடிக்கையாளரின் சொத்துக்களைப் பயன்படுத்தும் போதோ அல்லது விளைபொருளுடன் இணைக்கும் போதோ, அவை அடையாளம் காணப்பட்டு, பரிசோதனை செய்யப்படுவதுடன், சிறந்த முறையில் பாதுகாக்கப்படுகிறது (நிறுவனத்தின் மேற்பார்வையில்). வாடிக்கையாளரின் சொத்துக்களை இழக்க நேரிட்டாலோ, அவர்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டாலோ, அல்லது அவர்களின் சொத்துக்களை பொருத்தமற்ற பயன்பாட்டிற்கு உபயோகிக்கும்போதோ, அது குறித்த தகவல்களை அவர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்) (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்).
குறிப்பு: வாடிக்கையாளரின் தனித்தன்மை மற்றும் அவர்களின் தனிப்பட்ட நடவடிக்கை ஆகிய இரண்டையும் வாடிக்கையாளரின் ஆவணங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு: தற்போது வாடிக்கையாளரின் சொத்துக்கள் எதுவும் வைத்துக் கொள்ளப்படுவதில்லை (நிறுவனத்தின் மேற்பார்வையில்).
7.5.5 விளைபொருள் பாதுகாப்பு
உட்புற செயல்பாடுகளின் போது, விளைபொருட்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்படுகிறது (நிறுவனத்தின் மேற்பார்வையில்), மேலும் தேவைகளின் உறுதிப்பாட்டை ஊர்ஜிதம் செய்வதற்கு விளைபொருட்கள் குறிப்பிட்ட நோக்கத்துடன் விநியோகம் செய்யப்படுகின்றன. அடையாளம் காணுதல், திறமையான முறையில் பயன்படுத்துதல், சிப்பமாக்குதல், சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை பாதுகாப்பு நடவடிக்கைகளாகக் கருதப்படுகின்றன. விளைபொருளின் இன்றியமையாத பகுதியும் பாதுகாக்கப்படுகின்றது.
7.6 கண்காணிப்பு மற்றும் அளவீடு செய்யும் கருவியின் ஒழுங்குமுறை
கண்காணிப்பு மற்றும் அளவீடுகளுக்கு உத்திரவாதம் அளிப்பதற்கும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்), மற்றும் தேவைகளை உறுதி செய்வதற்கும், விளைபொருளின் நம்பகத்தன்மையை குறித்த ஆதாரத்தை வழங்குவதற்கும் தேவைப்படும் கண்காணிப்பு மற்றும் அளவீடு செய்யும் கருவிக்கு உத்திரவாதம் அளித்தல் வேண்டும். கண்காணிப்பு மற்றும் அளவீடு செய்யும் நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதுடன் (நிறுவனத்தின் மேற்பார்வையில்), அத்தகைய நடவடிக்கைகள் கண்காணிப்பு மற்றும் அளவீடு செய்யும் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இருக்கின்றனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். பின்வரும் கூற்றுகள் அளவீடு செய்யும் கருவியின் முடிவுகளை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கின்றன:
எ) சர்வதேச அல்லது தேசிய அளவீட்டுத் தரங்களுக்கு மாற்றாக மற்ற அளவீட்டுத் தரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அவைகள் சீரான இடைவெளியில் ஒழுங்குபடுத்தப்படுவதுடன், பரிசோதிக்கப்படுகிறது; இதுபோன்ற தரங்களைப் பயன்படுத்தாத போது, ஒழுங்குபடுத்துவது அல்லது அவற்றைப் பரிசோதிப்பதற்கான அடிப்படைத் தத்துவம் ஆவணம் செய்யப்படுகிறது,
பி) தேவைப்படும் இடங்களில் சீரமைப்பு அல்லது மறுசீரமைப்பு செய்தல்,
சி) அதன் ஒழுங்குமுறை குறித்த தரத்தைக் கண்டறிவதற்கான அங்கீகாரத்தைக் கொண்டிருத்தல்,
டி) அளவீடு செய்யப்பட்ட முடிவுகள் நீக்கம் செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளித்தல், மற்றும்
இ) கையாளுதல், பராமரிப்பு மற்றும் சேமிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் சேதம் மற்றும் தீங்குகளில் இருந்து பாதுகாப்பு அளித்தல்.
அளவீடு செய்யும் கருவி சரியான முறையில் தேவைகளைக் கண்டறியாதபோது, முந்தைய அளவீட்டு முடிவுகள் சரியான முறையில் மதிப்பாய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்படுகிறது (நிறுவனத்தின் மேற்பார்வையில்). கருவிகள் மற்றும் பாதிக்கப்பட்ட விளைபொருள் ஆகியவற்றின் மீது பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்). ஒழுங்குமுறை மற்றும் பரிசோதனையின் முடிவுகள் தொடர்பான ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்).
குறிப்பு: குறிப்பிட்ட பயன்பாட்டை நிறைவேற்றும் கணினி மென்பொருளின் நம்பகத்தன்மை அதைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்வது மற்றும் வடிவமைப்பது ஆகிய நடவடிக்கைகளைப் பொறுத்தது
உதவி ஆவணம்


கியூஓபி-76-01 கண்காணிப்பு மற்றும் அளவீடு செய்யும் கருவி
8.0 அளவீடு, பகுப்பாய்வு மற்றும் முன்னேற்றம்
8.1 பொதுவானவை
கண்காணிப்பு, அளவீடு, பகுப்பாய்வு மற்றும் முன்னேற்றம் போன்ற அத்தியாவச நடவடிக்கைகளைத் திட்டமிட்டுதல் மற்றும் நிறைவேற்றுதல் (நிறுவனத்தின் மேற்பார்வையில்):
எ) விளைபொருளின் தேவைகள் குறித்த நம்பகத்தன்மையை விளக்குவது,
பி) தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்தல், மற்றும்
சி) தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் சிறப்புத் தன்மையை மேம்படுத்துதல்.
புள்ளிவிவரத் தொழில்நுட்பத் திறன் மற்றும் பயன்பாட்டின் விரிவாக்கம் உள்ளிட்ட வழிமுறைகளை இது உள்ளடக்கியுள்ளது.
8.2 கண்காணிப்பு மற்றும் அளவீடு
8.2.1 வாடிக்கையாளரின் மனநிறைவு
தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பான அளவீடுகளைப் போல, வாடிக்கையாளர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பற்றிய தகவல்கள் கண்காணிக்கப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்). இந்தத் தகவல்களைப் பெறுவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பான வழிமுறைகள் கண்டறியப்படுகின்றன.
உதவி ஆவணம்
கியூஓபி-82-01 வாடிக்கையாளர் மனநிறைவு
8.2.2 உட்புற ஆய்வுகள்
தரக் கட்டுப்பாட்டு அமைப்பைக் குறித்து சீரான கால அளவில் மேற்கொள்ளப்படும் உட்புற பரிசோதனைகள் (நிறுவனத்தின் மேற்பார்வையில்) பின்வருமாறு:
எ) திட்டமிடப்பட்ட ஏற்பாடுகளை உறுதிசெய்வதுடன் (7.1 ஆம் பிரிவைப் பார்க்கவும்), ஐஎஸ்ஓ 9001:2008 மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் தேவைகள் குறித்தும் உறுதி செய்யப்படுகிறது (நிறுவனத்தின் மேற்பார்வையில்),
பி) உட்புற ஆய்வுகள் சிறந்த முறையில் நிறைவேற்றப்படுவதுடன், நிர்வகிக்கப்படுகிறது.
ஆய்வு நடவடிக்கைகள் திட்டமிடப்படுவதுடன், முந்தைய ஆய்வுகளின் முடிவுகளைப் போன்று, ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் மற்றும் எல்லைகள் குறித்த முக்கியத்துவம் மற்றும் நிலைகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆய்வின் அளவு, நோக்கம், நடவடிக்கை மற்றும் வழிமுறைகள் குறித்துத் தெளிவாக வரையறுக்கப்படுகின்றன. ஆய்வாளரின் தேர்வு மற்றும் ஆய்வுகளின் நடத்தை ஆகியவை ஆய்வு நடவடிக்கைகளின் நோக்கம் மற்றும் நடுநிலையை உறுதி செய்கின்றன. ஆய்வாளர்கள் தங்களின் சொந்தப் பணிகளை ஆய்வு செய்ய இயலாது. திட்டமிடுதல் மற்றும் ஆய்வுகளை நடத்துதல், முடிவுகளை அறிவிப்பது மற்றும் பதிவுகளை நிர்வகிப்பது (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்) ஆகியவற்றிற்கான பொறுப்புகள் மற்றும் தேவைகள் ஆவணங்களில் தெளிவாக வரையறுக்கப்படுகின்றன.
நிச்சயமற்ற தன்மை மற்றும் பின் விளைவுகள் போன்ற உறுதி செய்யப்பட்ட பிரச்சினைகளை நீக்குவதற்குத் தேவைப்படும் பொருத்தமான நடவடிக்கைகள் காலதாமதமின்றி மேற்கொள்ளப்பட்டதா என்பதை உறுதி செய்வது, மற்றும் ஆய்வு செய்த எல்லைகள் குறித்து உறுதி அளிப்பது போன்றவை நிர்வாகத்தின் பொறுப்புகளாகும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உறுதி செய்வது மற்றும் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகளை வெளியிடுவது (8.5.2 ஆம் பிரிவைப் பார்க்கவும்) உள்ளிட்டவை தொடர்ச்சியான நடவடிக்கைகளாகும்.
உதவி ஆவணம்
கியூஓபி-82-02 உட்புறத் தர ஆய்வுகள்
8.2.3 கண்காணிப்பு மற்றும் அளவீடு செய்யும் நடவடிக்கைகள்
தரக் கட்டுப்பாட்டு அமைப்பு நடவடிக்கைகளின் அளவீடுகளைக் கண்காணிப்பதற்கான பொருத்தமான வழிமுறைகளை மேற்கொள்ளுதல் (நிர்வாகத்தின் மேற்பார்வையில்). திட்டமிடப்பட்ட முடிவுகளை அடைவதற்கு இதுபோன்ற வழிமுறைகள் செயல்திறனை அடையாளம் காட்டுகின்றன. திட்டமிடப்பட்ட முடிவுகளை அடையாதபோது, திருத்தம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
8.2.4 கண்காணிப்பு மற்றும் விளைபொருளின் அளவீடு
விளைபொருள் வாடிக்கையாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கின்றதா என்பதை உறுதி செய்வதற்கு, விளைபொருளின் சிறப்பியல்புகள் கண்காணிக்கப்படுவதுடன், அளவீடு செய்யப்படுகிறது (நிறுவனத்தின் மேற்பார்வையில்). திட்டமிடப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் (7.1 ஆம் பிரிவைப் பார்க்கவும்), விளைபொருள் ஆய்வு தொடர்பான செயல்முறை அமைப்புகளின் மூலமாகவும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கீகாரத்துடன் கூடிய பொருத்தமான ஆதாரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. வாடிக்கையாளருக்கு (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்) விநியோகம் செய்வதற்கான விளைபொருளை வெளியிடும் அதிகாரம் கொண்ட நபரைப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. திட்டமிடப்பட்ட ஒப்பந்தங்கள் (7.1 ஆம் பிரிவைப் பார்க்கவும்) முழுமையாக நிறைவடையும் வரை, அல்லது அது தொடர்பான அதிகாரங்கள் வாடிக்கையாளரால் அங்கீகரிக்கப்படும் வரை, நுகர்வோருக்கான விளைபொருளை வெளியிடுவது மற்றும் சேவைகளை அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
உதவி ஆவணம்
கியூஓபி-82-03 உட்புற செயல்முறையைப் பரிசோதித்தல்
கியூஓபி-82-04 இறுதிப் பரிசோதனை
8.3 நிச்சயமற்ற விளைபொருளின் ஒழுங்குமுறை
விளைபொருளை நோக்கமின்றி பயன்படுத்துவது அல்லது விநியோகம் செய்வதைத் தடுப்பதற்கு, தேவைகளைப் பூர்த்தி செய்யாத விளைபொருட்கள் கண்டறியப்படுவதுடன், அவைகள் கட்டுப்படுத்தப்படுவதை உறுதி செய்தல் (நிறுவனத்தின் மேற்பார்வையி்ல்) வேண்டும். நம்பகத்தன்மையற்ற விளைபொருட்களை நிர்வகிப்பதற்கான பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பான ஒழுங்குமுறைகளை வரையறுப்பதற்கு, ஆவணம் செய்யப்பட்ட வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். நம்பகத்தன்மையற்ற விளைபொருள் உடனான உறவுமுறை பின்வரும் நடவடிக்கைகளால் (நிறுவனத்தின் மேற்பார்வையில்) ஏற்படுத்தப்படுகிறது:
எ) நம்பகத்தன்மையற்ற விளைபொருளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது,
பி) வாடிக்கையாளரின் அதிகாரத்தின் கீழ் அத்தகைய விளைபொருட்கள் வெளியிடப்பட வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட வேண்டு்ம்,
சி) அதன் உள்நோக்கம் மற்றும் பயன்பாட்டினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
டி) விநியோகம் செய்த பிறகு அல்லது பயன்படுத்துவது தொடங்கப்பட்ட பிறகு, நம்பகத்தன்மையற்ற விளைபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அத்தகைய விளைபொருளின் உள்ளார்ந்த விளைவுகளுக்குப் பொருத்தமான நடவடிக்கையை எடுத்தல் வேண்டும்.
நம்பகத்தன்மையற்ற விளைபொருட்கள் திருத்தம் செய்யப்படும் போது, திருத்தம் செய்யப்பட்ட விளைபொருட்கள் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இருக்கின்றனவா என்பதை நிரூபிப்பது அவசியமாகிறது. விநியோகம் செய்த பிறகு அல்லது பயன்படுத்தத் தொடங்கிய பிறகு, நம்பகத்தன்மையற்ற விளைபொருள் கண்டறியப்படும் பட்சத்தில், அத்தகைய விளைபொருள் காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு உள்ளார்ந்த மற்றும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்). சலுகை அளித்தது உள்ளிட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நம்பகத்தன்மையற்ற விளைபொருளின் தன்மை ஆகியவை சம்பந்தமான பதிவுகள் பாதுகாக்கப்படுகின்றன (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்).
உதவி ஆவணம்
கியூஓபி-83-01 நம்பகத்தன்மையற்ற விளைபொருளின் ஒழுங்குமுறை
8.4 தகவல்களின் பகுப்பாய்வு
தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் சிறப்புகள் மற்றும் தகுதியை விவரிப்பதற்கான பொருத்தமான தகவல்கள் கண்டறியப்பட்டு, சேகரிக்கப்படுவதுடன், ஆராயப்பட்டும் வருகிறது (நிர்வாகத்தின் மேற்பார்வையில்), மேலும் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் சிறப்புகள் எவ்வாறு மேம்படுத்தப்பட்டன என்பதைப் பரிசோதித்தல் வேண்டும். கண்காணிப்பு, அளவீடு மற்றும் மற்ற ஆதாரங்களில் இருந்து பெற்ற முடிவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தகவல்களை இந்தப் பரிசோதனை உள்ளடக்கியுள்ளது. பகுப்பாய்வு செய்யப்பட்ட தகவல்கள் பின்வரும் விவரங்களை அளிக்கின்றன:
எ) வாடிக்கையாளர் திருப்தி (8.2.1 ஆம் பிரிவைப் பார்க்கவும்),
பி) விளைபொருளின் தேவைகளை நிர்ணயம் செய்வது (8.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்),
சி) தடுப்பு நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளை உள்ளடக்கிய வழிமுறைகள், விளைபொருளின் சிறப்பியல்புகள் மற்றும் செயல் தடங்கள் (8.2.3 மற்றும் 8.2.4 ஆகிய பிரிவுகளைப் பார்க்கவும்),
டி) வழங்குனர்கள் (7.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்),
உதவி ஆவணம்

கியூஓபி-56-01 நிர்வாக மதிப்பாய்வு


8.5 முன்னேற்றம்

8.5.1 தொடர்ச்சியான முன்னேற்றம் 

தரக் கொள்கை, தரக் குறிக்கோள்கள், ஆய்வு முடிவுகள், தகவல் பகுப்பாய்வு, சரியான மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், மற்றும் நிர்வாக மதிப்பாய்வு ஆகியவற்றின் மூலம் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் தனித்தன்மையை முன்னேற்ற இயலும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்). உதவி ஆவணம்
கியூஓபி-85-01 தொடர்ச்சியான முன்னேற்றம்
8.5.2 திருத்தப்பட்ட நடவடிக்கைகள்
நம்பகத்தன்மையற்ற விளைபொருளின் விளைவுகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்). திருத்தப்பட்ட நடவடிக்கைகள் நம்பகத்தன்மையற்ற விளைபொருளுக்கு எதிரான விளைவுகளுடன் இணக்கமாக இருக்கின்றன. பின்வரும் தேவைகளை வரையறுப்பதற்கு ஆவணம் செய்யப்பட்ட வழிமுறைகள் ஏற்படுத்தப்படுகின்றன:
எ) நம்பகத்தன்மையற்ற விளைபொருளை மதிப்பாய்வு செய்வது (வாடிக்கையாளரின் புகார்கள் உட்பட),
பி) நம்பகத்தன்மையற்ற விளைபொருளின் விளைவுகளைக் கண்டறிவது,
சி) நம்பகத்தன்மையற்ற விளைபொருளைத் திரும்பப் பெறாமல் இருப்பதற்குத் தேவைப்படும் நடவடிக்கைகளை உறுதிசெய்வது,
டி) தேவைப்படும் நடவடிக்கைகளைக் கண்டறிந்து, நிறைவேற்றுவது,
இ) எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முடிவுகளைப் பதிவு செய்வது (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்), மற்றும்
எஃப்) திருத்தம் செய்யப்பட்ட நடவடிக்கைகளின் விளைவுகளை மதிப்பாய்வு செய்தல் வேண்டும்.
உதவி ஆவணம்
கியூஓபி-85-02 வாடிக்கையாளர் புகார்கள்
கியூஓபி-85-03 திருத்தப்பட்ட மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்
8.5.3 தடு்ப்பு நடவடிக்கைகள்
நம்பகத்தன்மையற்ற விளைபொருளை உருவாக்கும் காரணிகளைத் தடுப்பதற்குத் தேவைப்படும் நடவடிக்கைகளைக் கண்டறிதல் வேண்டும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்). தடுப்பு நடவடிக்கைகள் உள்ளார்ந்த பிரச்சினைகளின் விளைவுகளுடன் இணக்கமாக இருத்தல் வேண்டும். பின்வரும் தேவைகளை வரையறுப்பதற்கு ஆவணம் செய்யப்பட்ட வழிமுறைகள் தேவைப்படுகின்றன:
எ) நம்பகத்தன்மையற்ற விளைபொருளின் உள்ளார்ந்த பிரச்சினைகள் மற்றும் விளைவுகளைக் கண்டறிவது,
பி) நம்பகத்தன்மையற்ற விளைபொருளைப் பெறுவதைத் தடுப்பதற்குத் தேவைப்படும் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்தல்,
சி) தேவைப்படும் நடவடிக்கைகளைக் கண்டறிந்து, நிறைவேற்றுவது,
டி) எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முடிவுகளைப் பதிவு செய்தல் (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்) மற்றும்
இ) எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளின் விளைவுகளை மதிப்பாய்வு செய்தல் வேண்டும்.
உதவி ஆவணம்
கியூஓபி-85-03 திருத்தம் செய்யப்பட்ட மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்

1987 ஆம் ஆண்டின் பதிப்பு

[தொகு]

பிஎஸ் 5750 என்ற இங்கிலாந்து தரத்தைப் போன்ற கட்டமைப்பை ஐஎஸ்ஓ 9000:1987 கொண்டிருந்தது, மேலும் அமைப்பின் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையில் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிற்குத் தேவைப்படும் பின்வரும் மூன்று 'மாதிரிகள்' தேர்ந்தெடுக்கப்படுகின்றன:

  • வடிவமைப்பு, வளர்ச்சி, உற்பத்தி, நிறுவுதல் மற்றும் சேவைகள் ஆகியவற்றிலான தர உறுதிப்பாட்டிற்கான ஐஎஸ்ஓ 9001:1987 மாதிரி புதிய விளைபொருளை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கானவை.
  • உற்பத்தி, நிறுவுகை, மற்றும் சேவைகள் ஆகியவற்றிலான தர உறுதிப்பாட்டிற்கான ஐஎஸ்ஓ 9002:1987 மாதிரி அடிப்படையில் ஐஎஸ்ஓ 9000 ஐப் போல ஒரே மாதிரியான ஆவணங்களைக் கொண்டிருக்கிறது, ஆனால் அது புதிய விளைபொருளை உற்பத்தி செய்வதற்கான பாதுகாப்பைக் கொண்டிருக்கவில்லை.
  • நிதி சம்பந்தமான ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள் ஆகியவற்றிலான தர உறுதிப்பாட்டிற்கான ஐஎஸ்ஓ 9003:1987 மாதிரி உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருளை இறுதியாகப் பரிசோதனை செய்கிறது, ஆனால் விளைபொருள் எப்படி உருவானது என்பதைப் பற்றிய கருத்தை அது தெளிவுபடுத்துவதில்லை.

அமெரிக்கா மற்றும் மற்ற பாதுகாப்புத் தரங்கள் ("எம்ஐஎல் ஸ்பெக்ஸ்") ஐஎஸ்ஓ 9000:1987 ஐப் பயன்படுத்தின, மேலும் அத்தகைய தரநிலைகள் உற்பத்தியை ஆதரிக்கும் விதத்தில் இருந்தன. உண்மையான நோக்கமாக இருந்திருக்கக்கூடிய நிர்வாகத்தின் ஒட்டுமொத்த நிகழ்முறையைக் காட்டிலும் இந்த வலியுறுத்தலானது நடைமுறைகளுடனான உடன்பாட்டில் நிறுவப்படும் நோக்கத்தையே கொண்டிருந்தது.[சான்று தேவை]

1994 ஆம் ஆண்டின் பதிப்பு

[தொகு]

ஐஎஸ்ஓ 9000:1994 தரம் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருளைப் பரிசோதனை செய்வதற்குப் பதிலாக, தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தர உறுதிப்பாட்டிற்கு உத்திரவாதம் அளிப்பதுடன், ஆவணம் செய்யப்பட்ட வழிமுறைகளைப் பற்றிய ஆதாரங்களைக் கோருகிறது. முதல் பதிப்பில் காணப்பட்டதைப் போன்று, இதிலும் நிதி இழப்பீட்டிற்குத் தீர்வு காணும் வழிமுறைகள் சம்பந்தமான கையேட்டை உருவாக்குவதன் மூலம் நிறுவனங்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்தது, இது ஐஎஸ்ஓ அதிகாரிகளுக்கு பெரும் சுமையாகத் தெரிந்தது. சில நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் மேம்பாடு மற்றும் மாற்று நடவடிக்கைகள் தர அமைப்புகளால் தாமதப்படுத்தப்படுகின்றன.[சான்று தேவை]

2000 ஆம் ஆண்டின் பதிப்பு

[தொகு]

9001, 9002, மற்றும் 9003 ஆகிய மூன்று தரநிலைகளையும் ஐஎஸ்ஓ 9001:௦௦௦2000 இணைக்கிறது, இந்த நடவடிக்கை 9001 எனப்படுகிறது. ஒரு நிறுவனம் புதிய விளைபொருளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. செயல்முறை நிர்வாக மையத்தின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இந்த 2000 ஆம் ஆண்டின் பதிப்பு உதவுகிறது ("செயல்முறை நிர்வாகம்" உற்பத்தியின் முடிவில் விளைபொருளைப் பரிசோதிப்பதற்குப் பதிலாக, நிறுவனத்தின் பணிகள் மற்றும் நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுப்பதுடன், அவற்றைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது). வியாபார அமைப்பில் தரநிலைகளை ஒருங்கிணைப்பதற்கும், தரப் பணிகளை இளைய நிர்வாகிகளிடம் அளிப்பதைத் தவிர்ப்பதற்கும் 2000 ஆம் ஆண்டுப் பதிப்பு உயர் நிர்வாகிகளின் பங்களிப்பைக் கோருகிறது. செயல்முறை நடவடிக்கைகளின் அளவீடுகள், பணிகள் மற்றும் செயல்பாடுகளின் திறன் குறித்த மதிப்பாய்வுகள் ஆகியவற்றின் வழியாக விளைபயனை முன்னேற்றுவது மற்றொரு குறிக்கோளாகும். செயல்முறை முன்னேற்றத்திற்கான கோரிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர் மனநிறைவைக் கண்டறிவது போன்ற நடவடிக்கைகளைத் தெளிவான முறையில் மேற்கொள்ள வேண்டும்.

தரநிலை தொழில்நுட்பக் குழுக்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களால் ஐஎஸ்ஓ 9000 மறு ஆய்வு செய்யப்படுகிறது, மேலும் அந்த குழுக்கள் தரநிலைகளை அமலுக்குக் கொண்டுவரும் ஆய்வாளர்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெறுகின்றன.[1]

ஐஎஸ்ஓ 9001:2000 இன் தேவைகளைக் கண்டறிவது மற்றும் ஐஎஸ்ஓ 14001:2004 உடனான தொடர்பினை மேம்படுத்துவது ஆகிய நோக்கத்திற்காக ஐஎஸ்ஓ 9001:2008 அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் புதிய தேவைகள் எதுவும் கோரப்படவில்லை. ஐஎஸ்ஓ 9001:2008 ஐ மாற்றம் செய்தது தெளிவாக விவரிக்கப்படுகிறது. புதிய பதிவில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தங்களை தரக் கட்டுப்பாட்டு அமைப்பு சரியான முறையில் பின்பற்றுகிறதா என்பதை அறிந்துகொள்வதற்கு அதன் தரத்தினை உயர்த்துவது அவசியமாகிறது.சொந்த மதிப்பாய்வை சரிபார்க்கும் பட்டியல் உள்ளிட்ட ஐஎஸ்ஓ 9001:2008 இன் நடைமுறைகளைப் பற்றிய செயல்முறை விளக்கம் பரணிடப்பட்டது 2010-11-27 at the வந்தவழி இயந்திரம்

சான்றளிப்பு

[தொகு]

ஐஎஸ்ஓ தானாகவே சான்றிதழை வழங்கும் ஒரு அமைப்பு அல்ல. அங்கீகாரம் அளிக்கும் அமைப்புகளுக்கு அதிகாரத்தை அளிக்கப் பல்வேறு நாடுகள் அதிகாரம் அளிக்கும் அமைப்புகளை நிறுவியுள்ளது, மேலும் அங்கீகாரம் அளிக்கும் அமைப்புகள் நிறுவனங்களை ஆய்வு செய்வதுடன், ஐஎஸ்ஓ 9001 சான்றிதழைப் பெற சிபாரிசு செய்கின்றன. நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்காக வழங்கப்படும் சான்றிதழ் ஐஎஸ்ஓ 9001:2008 என்றழைக்கப்படுவதுடன், ஐஎஸ்ஓ 9000:2000 சான்றிதழ் எனவும் பொதுவாக குறிப்பிடப்படுகிறது. அங்கீகாரம் அளிக்கும் அமைப்புகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் அமைப்புகள் இரண்டும் தங்களின் சேவைகளுக்கான கட்டணத்தைக் கோருகின்றன. அங்கீகாரம் அளிக்கும் அமைப்பினால் (சிபி) வழங்கப்படும் சான்றிதழ் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு, பல்வேறு அங்கீகாரம் அளிக்கும் அமைப்புகள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொள்கின்றன.

அங்கீகாரத்தைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் நிறுவனம் அதன் அமைவிடம், நடவடிக்கைகள், விளைபொருட்கள், சேவைகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் மதிபாய்வு செய்யப்படுகிறது. அதே சமயம் பிரச்சினைகள் குறித்து ("தேவைப்படும் நடவடிக்கைகள்" அல்லது "இணக்கமற்ற தன்மை") நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பெரிய பிரச்சினைகள் எதுவும் கண்டறியப்படாதபோது, அல்லது நிர்வாகம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எவ்வாறு போதுமான மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு, அங்கீகாரம் அளிக்கும் அமைப்பு ஐஎஸ்ஓ 9001 தரச் சான்றிதழை வழங்குகிறது.

ஐஎஸ்ஓ தரச் சான்றிதழைப் பெற்றுவிட்டால் அனைத்தும் முடிந்துவிட்டதாகப் பொருள்கொள்ளப்பட மாட்டாது, மாறாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த அமைப்பின் மேற்பார்வையில் அந்தச் சான்றிதழைத் தொடர்ந்து புதுப்பித்தல் வேண்டும். திறன் முதிர்வு மாதிரிக்கு முரணாக ஐஎஸ்ஓ 9000க்குள்ளாக திறன் தரநிலைகள் என்று எதுவுமில்லை.

ஆய்வு செய்தல்

[தொகு]

தரச் சான்றிதழைப் பெறுவதற்குப் பின்வரும் இரண்டு வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன: வெளிப்புற சான்றிதழ் அளிக்கும் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் வெளிப்புற ஆய்வு மற்றும் இந்தச் செயல்பாட்டினை மேற்கொள்ள நிறுவனத்தைச் சார்ந்த நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்படும் (உட்புற ஆய்வு). அமைப்பானது ஒழுங்கான முறையில் செயல்படுகிறதா என்பதைச் சரிபார்ப்பது, எங்கே மேம்பாடுகளை மேற்கொள்வது என்பதைக் கண்டறிவது மற்றும் கண்டறியப்பட்ட பிரச்சினைகளைக் களைவது அல்லது சரிசெய்வது போன்ற மதிப்பாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது இதன் முக்கிய நோக்கமாகும். உட்புற ஆய்வாளர்கள் தங்களின் நிர்வாகத்தைக் குறித்து வெளியில் சென்று ஆய்வு மேற்கொள்வது சிறந்த விஷயமாகக் கருதப்படுகிறது, இதன் மூலம் அவர்கள் தங்களின் விசாரணைகள் குறித்த தற்சார்பான முடிவுகளைப் பெற இயலும்.

1994 தரத்தின் அடிப்படையில், "இணக்கமான ஆய்வுகளை" மேற்கொள்வதன் மூலம் ஆய்வு நடவடிக்கைகள் குறித்த பின்வரும் தகவல்களைப் பெற இயலும்:

  • என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதைத் தெரிவித்தல் (வியாபார நடவடிக்கைகள் விவரிக்கப்படுகின்றது)
  • தகவல்களை அளித்தல் (நடவடிக்கைகள் சம்பந்தமான கையேடுகளைக் குறிக்கிறது)
  • மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை நிரூபித்தல் (ஆவணம் செய்யப்பட்ட பதிவுகளை ஆதாரமாக அளித்தல்)

2000 தரநிலை வித்தியாசமான அணுகுமுறையைக் கையாளுகிறது. அபாயம், தரம் மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை மையப்படுத்துவதன் மூலம் "இணக்கத்தை" ஏற்படுத்துவதற்கான கலப்பற்ற ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் தேவைப்படுகின்றனர். இதன் பொருளானது, வழக்கமாகப் பரிந்துரைக்கப்படும் நடவடிக்கைகளைக்குப் பதிலாக, எது சிறந்தது என்பதைக் கண்டறிந்து ஆலோசனை வழங்கும் ஆய்வாளர்கள் தேவை என்பதாகும். முந்தைய தரத்திலிருந்து வேறுபடும் காரணிகள் கீழே விளக்கப்பட்டுள்ளன:

"கையேட்டில் கூறப்பட்டுள்ளதைப் போன்ற நடவடிக்கைகளை நீங்கள் சரியான முறையில் மேற்கொள்வீர்களா?" என்ற பொதுவான கேள்வியை 1994 ஆம் ஆண்டுப் பதிப்பு கொண்டிருக்கிறது, அதே சமயம் "இந்த நடவடிக்கை நீங்கள் திட்டமிட்டுள்ள இலக்கை அடைய உதவி செய்யுமா? இது சரியான நடவடிக்கையா அல்லது இதைச் சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கு வேறு ஏதேனும் வழி உள்ளதா?" போன்ற கேள்விகளை 2000 ஆம் ஆண்டுப் பதிப்பு கொண்டிருக்கிறது.[சான்று தேவை]

இஎம்எஸ் (ஐஎஸ்ஓ 14001), எஃப்இஎம்எஸ் (ஐஎஸ்ஓ 22000) போன்ற மற்ற நிர்வாக அமைப்புகளைப் போன்று, ஆய்வை மேற்கொள்ளும் ஐஎஸ்ஓ 19011 தரநிலை ஐஎஸ்ஓ 9001 இல் பயன்படுத்தப்படுகிறது.

நிறுவனம் தொடர்பான பொருள் விளக்கம்

[தொகு]

ஐஎஸ்ஓ 9001 தரநிலை பொதுவானதுடன், சுருக்கமானது. இதன் பிரிவுகள் மிகவும் கவனமாக விரிவாக்கம் செய்யப்படுவதுடன், குறிப்பிட்ட நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பொருளுள்ளதாக மாற்றுகிறது. மென்பொருளை உருவாக்குவது என்பது பாலாடைக் கட்டியை உருவாக்குவதைப் போன்றதோ அல்லது ஆலோசனை வழங்குவதைப் போன்றதோ அல்ல; இருப்பினும் ஐஎஸ்ஓ 9001 வழிமுறைகள், வியாபார நிர்வாகத்தில் பயன்படுத்தப்படும் வழிமுறைகளாகும். காவல் துறைகள் (அமெரிக்கா), கால்பந்தாட்டக் குழுக்கள் (மெக்சிகோ) மற்றும் நகராட்சி மன்றங்கள் (இங்கிலாந்து) போன்ற பல்வேறு அமைப்புகள் வெற்றிகரமாக ஐஎஸ்ஓ 9001:2000 அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றன.

பல்வேறு நி்ர்வாகத் துறைகள் சந்தைகளில் தங்களின் வழிமுறைகள் குறித்த விளக்கங்களை தெளிவாக வரையறுக்க விரும்புகிறது. ஐஎஸ்ஓ 9000 பதிப்புகள் அவைகளின் தேவைகளைப் பகுதியளவு பூர்த்தி செய்யும் வகையில் இருக்கின்றன, ஆனால் அவைகளை ஆய்வு செய்வதற்கு சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, அனுபவம் வாய்ந்த ஆய்வாளர்களை அனுப்பி வைத்தல் அவசியமாகிறது.

  • டிக்ஐடி இன் வழிமுறைகள் இங்கிலாநது வர்த்தக அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஐஎஸ்ஓ 9000 தரநிலையின் பொருள் விளக்கம் என்பதுடன், தகவல் தொழில்நுட்பத் துறையின் நடவடிக்கைகளுக்குப் பொருத்தமாக இருக்கின்றன, குறிப்பாக மென்பொருள் உருவாக்கத்திற்கு பொருத்தமாக இருக்கின்றன.
  • எஎஸ்9000 என்பது விண்வெளி சாதனங்களுக்கான அடிப்படைத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு என்பதுடன், விண்வெளி சாதனங்களை உற்பத்தி செய்யும் பெரும்பாலான உற்பத்தியாளர்களால் அதன் பொருள் விளக்கமானது உருவாக்கப்பட்டது. அலைட்சிக்னல், ஆலிசன் இன்ஜின், போயிங், ஜெனரல் எலெக்ட்ரிக் ஏர்கிராஃப்ட் இன்ஜின்ஸ், லாக்ஹீட்-மார்டின், மெக்டொன்னல் டக்லஸ், நார்துரோப் கிரம்மேன், பிராட் & விட்னே, ராக்வெல்-காலின்ஸ், சிகோர்ஸ்கி ஏர்கிராஃப்ட், மற்றும் சன்ட்ஸ்டிரான்ட் உள்ளிட்டவை பெருமாபாலான உற்பத்தியாளர்கள் ஆவர். எஎஸ்9100 என்பது தற்போதைய பதிப்பாகும்.
  • பிஎஸ் 9000 என்பது மருந்தைச் சிப்பமாக்கும் உபகரணங்களின் தரநிலைகளுக்கான பயன்பாடாகும். தர உறுதிப்பாட்டு நிறுவனத்தின் (ஐகியூஏ) மருந்து தயாரிக்கும் தரக் குழு (பிகியூஜி) பிஎஸ் 9000:2001 ஐ உருவாக்கியது. மருந்தைச் சிப்பமிட்டு விநியோகிக்கும் நிறுவனத்தில் உள்ள அனைவரும் அங்கீகரிக்கும்படியான ஜிஎம்பி கட்டமைப்பை உருவாக்குவதை பிஎஸ் 9000 தனது குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. மேலும் இது மருந்தை சிப்பங்களாக வடிவமைத்து விநியோகிக்கும் உபகரணங்களில் ஐஎஸ்ஓ 9001: 2000 ஐப் பயன்படுத்துகிறது.
  • கியூஎஸ் 9000 என்பது பெரும்பாலான தானியங்கி உற்பத்தியாளர்களால் (ஜிஎம், போஃர்ட், கிரிஸ்லெர்)அங்கீகரிக்கப்பட்ட தரநிலையாகும். எஃப்எம்இஏ மற்றும் ஏபிகியூபி போன்ற தொழில்நுட்பங்களை இது உள்ளடக்கியுள்ளது. கியூஎஸ் 9000 தற்போது ஐஎஸ்ஓ/டிஎஸ் 16949 ஆல் பதிலீடு செய்யப்படுகிறது.
  • ஐஎஸ்ஓ/டிஎஸ் 16949:2009 என்பது பெரும்பாலான தானியங்கி உற்பத்தியாளர்களால் (அமெரிக்க மற்றும் ஐரோப்பிய உற்பத்தியாளர்கள்) ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலையாகும்; இதன் சமீபத்திய பதிப்பு ஐஎஸ்ஓ 9001:2008 ஐ அடிப்படையாகக் கொண்டது. ஐஎஸ்ஓ 9001:2008 இன் செயல்முறைகளின் அணுகுமுறை மிகவும் திடமாகக் காணப்படுகிறது. ஐஎஸ்ஓ 9001:2008 இன் முழு விவரங்கள் மற்றும் தானியங்கித் துறையின் குறிப்பிட்ட தேவைகள் ஆகியவற்றை ஐஎஸ்ஓ/டிஎஸ் 16949:2009 உள்ளடக்கியுள்ளது.
  • டிஎல் 9000 என்பது தொலைத் தொடர்புத் தர நிர்வாகம் மற்றும் அளவீட்டு அமைப்புத் தரநிலை என்பதன் பொருள் ஆகும், மேலும் கிவெஸ்ட் அமைப்பு என்ற தொலைத் தொடர்புச் சங்கத்தால் இதற்குப் பொருள் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் தற்போதைய பதிப்பு 4.0௦ என்பதுடன், ஐஎஸ்ஓ 9001 அல்லது மேற்கூறிய தரநிலைகளைப் போல அல்லாமல், அளவீடு செய்யப்பட்ட நிலையான விளைபொருள் சம்பந்தமான மதிப்பாய்வை டிஎல் 9000 உள்ளடக்கியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தர அமைப்புகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, 1998 ஆம் ஆண்டு கிவெஸ்ட் அமைப்பு டிஎல் 9000 என்ற தரக் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்கியது.
  • இது ISO 13485:2003 மருத்துவத் துறையின் ஐஎஸ்ஓ 9001:2000 தரநிலைக்கு நிகரானது. ஐஎஸ்ஓ 9001 மற்றும் ஐஎஸ்ஓ 9002 தரநிலைகள் எப்படி மருத்து உபகரணங்களுக்கு வழங்கப்பட்டன என்பதைப் பற்றிய விளக்கங்களை இந்தத் தரநிலை வழங்குகிறது, மேலும் ஐஎஸ்ஓ 13485:2003 என்பது ஒரு தனிப்பட்ட தரநிலையாகும். ஐஎஸ்ஓ 13485 உடன் இணக்கமாக இருக்கும் விஷயங்கள் ஐஎஸ்ஓ 9001:2000 உடன் இணக்கமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
  • பெட்ரோலியம், பெட்ரோலிய இரசாயனங்கள், இயற்கை எரிவாயு நிறுவனங்களுக்கான விளைபொருளின் வடிவமைப்பு, வளர்ச்சி, உற்பத்தி, நிறுவுதல் மற்றும் சேவைகள் போன்றவற்றின் தேவைகளுக்கான தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஐஎஸ்ஓ/டிஎஸ் 29001 எனப்படும். இது பெயர்ச்சுருக்க இணைப்பு இல்லாமலேயே ஏபிஐ ஸ்பெக் க்யு1க்கு சமமாக இருக்கிறது.

விளைபயன்

[தொகு]

பின்வருபவை ஐஎஸ்ஓ 9000 இன் சிறப்புத் தன்மையை மையப்படுத்தும் விதத்தில் இருக்கின்றது:

  1. ஐஎஸ்ஓ 9001:2000 இன் மதிப்பாய்வில் தரக் கொள்கைகள் இருக்கின்றனவா? (பதிப்புத் தேதியைக் குறித்து வைப்பது மிகவும் முக்கியமானது: 2000 ஆம் ஆண்டின் பதிப்பில், ஐஎஸ்ஓ 9000:1994 இன் முக்கியத்துவம் மற்றும் குறைபாடுகளைத் தெளிவாக்கும் முயற்சியில் ஐஎஸ்ஓ ஈடுபட்டுள்ளது).
  2. இது ஐஎஸ்ஓ 9001:2000 தரக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கான இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவி செய்யுமா?
  3. இது ஐஎஸ்ஓ 9001:2000 சான்றிதழைப் பெற உதவி செய்யுமா?

மேம்பாடு

[தொகு]

வியாபார முன்னேற்றம், முதலீட்டைக் குறித்த நேர்மறையான விளைவுகள், வியாபாரப் பங்கு, விற்பனை வளர்ச்சி, விற்பனை அளவீடு, போட்டியிடும்படியான முன்னேற்றத்தை அளித்தல், சட்டரீதியான வழக்குகளைத் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளை தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை இது வழங்குகிறது.[1][2] வேட்டின் [3] கருத்தின்படி, ஐஎஸ்ஓ 9000:2000 இல் உள்ள தரக் கொள்கைகள் முழுமை பெற்றுக் காணப்படுகின்றன, மேலும் பேர்னெஸின் [2] கூற்றின்படி, "எந்த நிறுவனத்திடமும் போட்டியிடும்படியான தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மாதிரியை ஐஎஸ்ஓ 9000 நெறிமுறைகள் அளிக்கின்றன." இலாபத்தை அதிகரிக்கும் ஐஎஸ்ஓ 9000௦ ஐப் பற்றிய லியோட்சின் தர உறுதிக் கொள்கையை பேர்னெஸ் சிறப்பான முறையில் சுட்டிக்காட்டுகிறார், மேலும் பதிவு செய்வதற்காகச் செலவிட்ட தொகையை மூன்று வருடங்களில் திரும்பப்பெற இயலும் என்று டெலாய்டி-டௌகி தெரிவிக்கிறார். புராவிடன்ஸ் பிசினஸ் நியூஸின் [4] கூற்றின்படி, ஐஎஸ்ஓவை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெற இயலும்:

  1. திறமையான மற்றும் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை உருவாக்க இயலும்
  2. வாடிக்கையாளரின் திருப்தியை அதிகரிக்க இயலும்
  3. ஆய்வுகளைக் குறைக்க இயலும்
  4. சந்தையிடலைத் துரிதப்படுத்த இயலும்
  5. ஊழியர்களின் நோக்கம், விழிப்புணர்வு, மற்றும் மனவுறுதியை மேலும் சிறப்பாக்க இயலும்
  6. சர்வதேச சந்தையை உயர்த்த முடியும்
  7. இலாபத்தை அதிகரிக்க இயலும்
  8. உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் வீணாக்குவதைக் குறைக்க இயலும்

800 ஸ்பெயின் நாட்டு நிறுவனங்களை [5] ஆய்வு செய்தபோது, ஐஎஸ்ஓ 9000 ஐப் பதிவுசெய்ததே அவைகளின் முன்னேற்றத்திற்குக் காரணமாக அமைந்தது என்பதைக் கண்டறிய முடிந்தது, ஏனெனில் அந்த நிறுவனங்கள் முன்பே தர கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தன என்பதுடன், ஐஎஸ்ஓ 9000 ஐப் பற்றிய விழிப்புணர்வையும் கொண்டிருந்தன.[1]

சிக்கல்கள்

[தொகு]

பணம், கால அளவு, மற்றும் கடிதத் தொடர்புகள் போன்றவை ஐஎஸ்ஓ 9001 ஐப் பதிவு செய்வதற்கான பொதுவான பிரச்சினைகளாகக் கருதப்படுகின்றன.[6] "மற்றவர்கள் இதை வெறும் ஆவணம் என்றே குறிப்பிடுவார்கள். ஒரு நிறுவனம் தனது தர அமைப்பை ஆவணம் செய்யும் பட்சத்தில், அந்த நிறுவனம் தனது அனைத்து அலுவலக வேலைகளையும் எளிமையாக்க இயலும் என இதை ஆதரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர், என்று பேர்னெஸ் குறிப்பிடுகிறார்."[2]

ஐஎஸ்ஓ 9001 தரச் சான்றிதழைப் பெற்ற விளைபொருட்கள் அனைத்தும் சிறந்தவை என்று பொருள் கொள்ளக்கூடாது. குறைந்த தரத்திலான விளைபொருளை உற்பத்தி செய்து வழங்கும் நோக்கத்துடன் செயல்படும் நிறுவனம், சரியான ஆவணங்களைக் காட்டி ஐஎஸ்ஓ 9001 முத்திரையைத் தனது விளைபொருளில் பயன்படுத்த இயலும். சேடெனின் கருத்தின்படி, புரி்ந்துகொள்ளுதல் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றைக் காட்டிலும், வரையறை, கட்டுப்பாடு மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை ஐஎஸ்ஓ 9001 துரிதப்படுத்த இயலும். [7][8] வேட்டின் கருத்தின்படி, ஐஎஸ்ஓ 9000 என்பது சிறந்த வழிகாட்டியாகும், மேலும் "சிறந்த தரத்திலான விளைபொருளை உற்பத்தி செய்வதற்கு அத்தகைய சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன என்ற தவறான எண்ணத்தை நிறுவனங்கள் கொண்டிருப்பதற்கு, ஐஎஸ்ஓ 9000 ஐ ஒரு தரமாக அங்கீகரிப்பதே காரணமாகும், ... [வலுவிழத்தல்] ஆகேவே ஒரு நிறுவனம் தனது தர அமைப்பை உறுதி செய்வது அவசியமாகிறது." [3] வேடின் கருத்தின்படி, ஐஎஸ்ஓ 9001 வரையறைகளில் நம்பி்க்கை கொள்வதன் மூலம் வெற்றிகரமான தர அமைப்பை உருவாக்க உறுதியளிக்க இயலாது என்பதாகும்.

சர்வேதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றபோதிலும், பெரும்பாலான அமெரிக்க வாடிக்கையாளர்கள் ஐஎஸ்ஓ 9000௦௦ ஐப் பற்றிய விழிப்புணர்வின்றி காணப்படுகின்றனர் என்பதுடன், அது தங்களுக்குப் பொருத்தமானதல்ல என்ற கருத்தையும் அவர்கள் கொண்டுள்ளனர். விளைபொருளைப் பயன்படுத்துவோருக்கு ஐஎஸ்ஓ 9000 தரம் தேவைப்படாத பட்சத்தில், அத்தகைய சான்றிதழை வாங்குவது மற்றும் அதைப் பாதுகாப்பதற்காகச் செலவிடப்படும் தொகை பயனற்றதே ஆகும். ஐஎஸ்ஓ 9000 சான்றிதழைப் பெறாத நிறுவனத்திற்கு எதிரான போட்டியின் போது, சான்றிதழைப் பெற்ற நிறுவனம் முதலீடு செய்யும் தொகைக்கு பாதுகாப்பு இல்லாமல் போக வாய்ப்புள்ளது.

ஒரு நிறுவனம் தரத்தைக் கருத்தில் கொள்ளாமல் சான்றிதழைப் பெறுவதில் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் தரம் நிச்சயம் தோல்வியைச் சந்திக்கும்.[7] சான்றிதழ்கள் தரத்தினை மேம்படுத்துவதில் விருப்பம் தெரிவிப்பதைக் காட்டிலும், வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன.[2][9] "நீங்கள் வெறும் சான்றிதழை வாங்கி அதைச் சுவரில் தொங்கவிட விரும்பினால் அது மிகவும் சுலபமானது, அதே சமயம் அதைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் அலுவலக வேலைப்பாடுகளை மேற்கொள்ளும்போது அது உங்கள் வியாபாரத்திற்குப் போதுமான ஆதரவை அளிக்காது", என்று ஐஎஸ்ஓவின் ரோஜர் பாரஸ்ட் தெரிவித்தார்.[9] ஒரு தற்சார்பான ஆய்வாளரின் மூலம் சான்றிதழைப் பெறுவது என்பதும் பிரச்சினைக்குரிய விஷயமாகும், பேர்னெஸ் இன் கூற்றின்படி, "ஆலோசனை வழங்கும் சேவைகள் அதிகரித்ததற்கு இத்தகைய சான்றிதழ்கள் முக்கிய கருவியாகச் செயல்பட்டன என்பதாகும்." [2] உண்மையில், சான்றிதழ் இல்லாமல் ஐஎஸ்ஓ 9001 ஐச் செயல்படுத்த முடியும் என ஐஎஸ்ஓ தெரிவிக்கிறது, இதன் மூலம் தரக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது எளிமையாக்கம் செய்யப்படுகிறது. [10]

சான்றிதழ் வழங்கும் பல அமைப்புகளுக்கு இடையேயான போட்டியே, நிறுவனங்களின் தர அமைப்புகளின் செயல்பாடுகளில் காணப்படும் சிறிய குறைகள் பெரிதாக கவனிக்கப்படாமல் விடுவதற்குக் காரணமாக அமைகிறது, என்று மற்றொரு குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.

தரச் சுற்றுக்கள் போன்ற நவீன மேலாண்மை உரையாடல்கள் மணி வளைவு வடிவத்திலான வாழ்க்கை சுழற்சியை பின்பற்ற முனைவது மேலாண்மை மங்கிப்போவதை குறிப்பிடுவதற்கு சாத்தியமானதாக இருக்கலாம் என்று ஆப்ரஹாம்சன்[11] வாதிடுகிறார்.

தொகுப்பு

[தொகு]

ஐஓஸ்ஓ 9000 இன் பயன்பாட்டினை சிறப்பானதாக்குவதற்கு பேர்னஸ் தரும் சிறந்த ஆலோசனைகள்: [2]

"Good business judgment is needed to determine its proper role for a company... Is certification itself important to the marketing plans of the company? If not, do not rush to certification... Even without certification, companies should utilize the ISO 9000 model as a benchmark to assess the adequacy of its quality programs."

மேலும் காண்க

[தொகு]
  • மதி்ப்பாய்வின் உறுதிப்பாடு-ஐஎஸ்ஓ வெளியிட்டுள்ள தரங்களை உள்ளடக்கியுள்ளது
  • ஐஎஸ்ஓ 10006-தர நிர்வாகம்-திட்டங்களில் தர அமைப்பபிற்கு வழிகாட்டுகிறது
  • ஐஎஸ்ஓ 14001-சுற்றுப்புற பாதுகாப்பை நிர்வகிக்கும் தரங்கள்
  • ஐஎஸ்ஓ 19011-தரக் கட்டு்ப்பாட்டு அமைப்பின் ஆய்வு மற்றும் சுற்றுப்புற பாதுகாப்பை நிர்வகிக்கும் தர ஆய்விற்கான வழிகாட்டுதல்
  • ஐஎஸ்ஓ/டிஎஸ் 16949-தானியங்கி தொடர்பான விளைபொருட்களை வழங்குனருக்கான தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் தேவைகள்
  • ஐஎஸ்ஓ/ஐஇசி 27001-தகவல் பாதுகாப்பு நிர்வாகம்
  • ஏஎஸ் 9100-வான்வெளி ஆராய்ச்சி நிறுவன நடவடிக்கைகளுக்கான ஐஎஸ்ஓ 9000/1
  • ஐஎஸ்ஓ தரநிலைகளின் பட்டியல்
  • தரக் கட்டுப்பாட்டு அமைப்பு
  • சோதனை நிர்வாகம்
  • திருத்தம் மற்றும் உறுதிப்பாடு

குறிப்புதவிகள்

[தொகு]
  1. 1.0 1.1 "கட்டுப்பாடுகளின் ஆய்வு: ஐஎஸ்ஓ 9001 பயனற்றதை சுட்டிக்காட்டுகிறது". ஸ்காட் டேல்கலிஷ். குவாலிட்டி பத்திரிகை ஏப்ரல் 1, 2005.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "சிறந்த வியாபார நுணுக்கம் ஐஎஸ்ஓ 9000 ஐ சுலபமாக அணுக உதவும்" பரணிடப்பட்டது 2009-02-27 at the வந்தவழி இயந்திரம் ரெவியூவ் ஆப் பிசினஸில் பிராங்க் பார்னெஸ் குறிப்பிட்டது, ஸ்பிரிங் 2000.
  3. 3.0 3.1 "ஐஎஸ்ஓ 9000 உண்மையிலேயே ஒரு தரமா"? பரணிடப்பட்டது 2006-07-07 at the வந்தவழி இயந்திரம் ஜிம் வேட், ஐஎஸ்ஓ கட்டுப்பாட்டு அமைப்பு - மே-ஜூன் 2002
  4. "நிறுவனங்கள் ஏன் ஐஎஸ்ஓ சான்றிதழைப் பெற வேண்டும் என்பதற்கான காரணங்கள்", புராவிடன்ஸ் பிசினஸ் செய்திகள் , ஆகஸ்ட் 28, 2000.
  5. "விற்பனை மற்றும் இலாபத்திற்கான ஐஎஸ்ஓ 9000 பதிவுகளின் விளைவு: பரிந்துரைக்கு முன்பும் பின்னபுமான நடவடிக்கைகள் குறித்த திட்டவட்டமான பகுப்பாய்வு." ஹினாகி ஹெராஸ், கேவின் பி.எம். டிக், மற்றும் மார்தி கசாடெசஸ். இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் குவாலிட்டி அன்ட் ரிலையப்லிட்டி மேனேஜ்மென்ட் புத்தகம் 19, எண்ணிக்கை. 6, 2002.
  6. "பின்பற்றுவதற்கு பல்வேறு தரநிலைகள் உள்ளன, அதற்கான சிறிய தொகையை செலுத்தவும்". ஸ்டெபானி கிலிஃப்போர்ட். இன்க் பத்திரிகை, மே 2005.
  7. 7.0 7.1 "'தரத்தினை' உங்களால் உணர இயலாது", ஜான் சேடன், தி அப்செர்வர் , ஞாயிறு நவம்பர் 19, 2000
  8. "ஐஎஸ்ஓ 9000 ஐப் பற்றிய விரிவான வரலாறு: எங்கே நாம் தவறு செய்தோம்?" பரணிடப்பட்டது 2008-07-04 at the வந்தவழி இயந்திரம். ஜான் சேடன். "ஐஎஸ்ஓ 9000 க்கு எதிரான நிலையின்" அத்தியாயம், இரண்டாம் பதிப்பு., ஆக் டிரீ பதிப்பகம். நவம்பர் 2000 ஐஎஸ்பிஎன் 0-471-69059-7.
  9. 9.0 9.1 "ஐஎஸ்ஓ வழியில்." மார்க் ஹென்ரிக்ஸ். தொழிலதிபரைப் பற்றிய பத்திரிகை டிசம்பர் 2001.
  10. ஐஎஸ்ஓவைப் பற்றிய பார்வை - 2005 (சுருக்கமான பதிப்பு, பிடிஎஃப், 3 எம்பி), ஐஎஸ்ஓ, 2005
  11. ஆப்ரஹாம்சன், இ. (1996) "நி்ர்வாக முறை." நிர்வாக மதிப்பீட்டுக் கழகம். 21(1):254-285.

மேலும் படிக்க

[தொகு]
  • பேம்போர்ட், ராபர்ட்; டெய்ப்லர், வில்லியம் (2003). ஐஎஸ்ஓ 9001: 2000 மென்பொருள் மற்றும் அமைப்புகளை வழங்குவோர்: ஒரு தொழில்நுட்ப அணுகுமுறை (முதல் பதிப்பு). சிஆர்சி பதிப்பகம். ஐஎஸ்பிஎன் 0849320631, ஐஎஸ்பிஎன் 978-0849320637
  • வேவே. இ., மார்க்கஸ், எ. (2004). "நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு எப்போது ஐஎஸ்ஓ 9000 தரக் கட்டுப்பாட்டு அமைப்பு செயல்படுத்தப்பட்டது?", பொறியியல் நிர்வாகத்தின் ஐடிரிபிள்இ நடைமுறைகள் , 51(3), 352–363.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ.எசு.ஓ_9000&oldid=3355109" இலிருந்து மீள்விக்கப்பட்டது