ஈகில்சு
Appearance
ஈகில்சு | |
---|---|
“லாங் ரோட் அவுட் ஆவ் ஈடன்” சுற்றின் போது (இ-வ): கிளென் பிரை, டான் என்லி, ஜோ வால்சு, திமொதி சிமிட். | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | லாசு ஏஞ்சலசு, கலிபோர்னியா. |
இசை வடிவங்கள் | ராக், ஹாட் ராக், கிராம ராக், |
இசைத்துறையில் | 1971–1980 1994–தற்போது வரையில் |
இணையதளம் | www.eaglesband.com |
உறுப்பினர்கள் | கிளென் பிரை டான் என்லி ஜோ வால்சு திமொதி சிமிட் |
முன்னாள் உறுப்பினர்கள் | டான் பெல்டர் ரேண்டி மெய்சுனர் பெர்னீ லீடன் |
ஈகில்சு என்ற அமெரிக்க “கிராம ராக் இசை”க் குழு கிளென் பிரை, டான் என்லி, பெர்னீ லீடன், ரேண்டி மெய்சுனர் ஆகியோரால் 1971-இல் உருவாக்கப்பட்டது. தரப்பட்டியலில் ஐந்து முதலிட தனிப்பாடல்களையும் ஆறு பாடல் தொகுப்புகளையும் கொடுத்துள்ள இக்குழு 1970-களின் மிகப்பிரபலமான இசைக்குழுக்களுள் ஒன்றாக இருந்தது. ஈகில்சு இசையமைத்த ஓட்டல் கலிபோர்னியா என்ற பாடல் தொகுப்பு ரோலிங் இசுட்டோன் என்ற (இசைக்கான) பத்திரிகையின் “இதுவரை வெளியான தொகுப்புகளில் முதல் 500 மிகச்சிறந்த இசைத்தொகுப்பு” என்ற தரவரிசையில் 37-வது இடத்தைப் பிடித்தது. ஈகில்சின் “தேயர் கிரேட்டஸ்ட் ஹிட்ஸ்” என்ற தொகுப்பு அமெரிக்காவில் மட்டும் 29 மில்லியன் படிகளும் உலகளவில் மொத்தம் 42 மில்லியன் படிகளும் விற்று சாதனை படைத்தது. 1980-இல் இக்குழு பிரிந்து, மீண்டும் 1994-இல் ஒன்றிணைந்தது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Deacon Frey and Vince Gill Join The Eagles for Classic West-East Festivals". CMT. June 1, 2017. Archived from the original on December 1, 2017. பார்க்கப்பட்ட நாள் 15 March 2019.
- ↑ Willman, Chris (April 6, 2022). "Deacon Frey Leaves the Eagles After Long Run Filling in for Father Glenn Frey". Variety. பார்க்கப்பட்ட நாள் May 3, 2022.
- ↑ "Gold's Hall of Fame: Eagles". Gold. September 5, 2019. பார்க்கப்பட்ட நாள் September 3, 2020.