விளையாட்டு
ஓர் ஒழுங்குடன் ஆடப்படும் செயற்பாடு ஆட்டம் (game) அல்லது விளையாட்டு எனலாம். பொதுவாக மனமகிழ்விற்காக இது ஆடப்பட்டாலும் கல்வி நோக்கம் கொண்டும் ஆட்டங்கள் வடிவமைக்கப்படுவதுண்டு. இவ்வகை ஆட்டங்கள் விளையாட்டுப் போட்டிகளினின்றும் வேறுபட்டவை; போட்டிகள் தீவிரமாக நடத்தப்படாமையும் உடற்றிறன் கூடுதலாக வேண்டாமையும் சில காரணிகள். அதேபோல எண்ணங்களின் வெளிப்பாடாக இல்லாமையால் கலையும் அல்ல. இருப்பினும் இந்த வேறுபாடுகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. சிலர் ஊதியம் பெற்று விளையாடுவதால் இதனை வேலையாகக் கருதுவோரும் உண்டு.சில ஆட்டங்கள் (காட்டாக, புதிர்கள், கணினி ஆட்டங்கள்) கலைத் திறனோடு வடிவமைக்கப்பட வேண்டி யிருப்பதால் கலை என்ற பகுப்பிலும் கொள்ளலாம்.
ஓர் ஆட்டத்தின் முக்கிய கூறுகள்: இலக்குகள், விதிமுறைகள், சவால்கள் மற்றும் எதிரெதிர்ச் செயல்கள் ஆகும். இவை பொதுவாக மனத்திறன் அல்லது உடற்றிறனை தூண்டுவதாக அமையும். நடைமுறைத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், ஓர் உடற் பயிற்சியாகவும், கல்வி கற்றலின் கூறாகவும் உளவியலைத் தூண்டுவதாகவும் அமைகிறது. கூட்டாளிகளின் பங்களிப்பு இல்லாமையால் சாலிடேர், சிக்சா புதிர் போன்ற "ஆட்டங்கள்" ஆட்டவகையில் அல்லாது புதிர்கள் வகைப்பாற்படும் என கிரிசு கிராஃபோர்ட் போன்ற ஆட்ட வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.[1] கி.மு 2600-ஆம் ஆண்டிலிருந்தே,[2][3] மனித நாகரிகத்தின் உலகளாவிய கூறாக ஆட்டங்கள் இருந்து வந்திருக்கின்றன. அனைத்து பண்பாடுகளிலும் முதன்மை இடம் பெற்றிருந்தன.[4] தமிழ் சங்கப் பாடல்களிலும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திலும் பல ஆட்டங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
விளையாட்டுகள்
[தொகு]விளையாட்டுக்கள் சிறப்பு கருவிகளையும் தனிப்பட்ட ஆடுகளங்களையும் கொண்டு விளையாடுபவர்களைத் தவிர சமூகத்தின் பெரும்பகுதியின் ஈடுபாட்டுடன் ஆடப்படுவதாகும். ஒரு நகரமோ குடியமைப்போ இத்தகைய வசதிகளை செய்து கொடுக்க வேண்டியிருக்கும்.
பரவலான விளையாட்டுகள் பார்வையாளர்களின் மகிழ்ச்சியைத் தூண்டுவதாகவும் அமைகின்றன. தங்களுடைய உள்ளூர் அணியுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டு, எதிரணிகளுடன் பகைமை பாராட்டுவதும் உண்டு. இரசிகர்கள் அல்லது விசிறிகள் விளையாட்டுத் துறையில்தான் முதலில் உருவானார்கள்.
விளையாட்டு வகைகள்
[தொகு]- பிரிவு 1 - உள்ளக விளையாட்டு, வெளியக விளையாட்டு.
- பிரிவு 2 - கோட்டு விளையாட்டு, கோடில்லா விளையாட்டு.
- பிரிவு 3 - குழு விளையாட்டு, தனி விளையாட்டு,
உள்ளக விளையாட்டு
[தொகு]இடங்களுக்கு உள்ளே விளையாடும் விளையாட்டுகளை உள்ளக விளையாட்டு என்று அழைப்பார்கள்.
எ.கா.:-
வெளியக விளையாட்டு
[தொகு]இடங்களுக்கு வெளியே விளையாடும் விளையாட்டுகளை வெளியக விளையாட்டு என்று அழைப்பார்கள்.
எ.கா.:-
கோட்டு விளையாட்டு
[தொகு]விளையாட்டை கோட்டுக்குள்ளே விளையாடினால் அது கோட்டு விளையாட்டு என்று அழைப்பார்கள்.
எ.கா.:-
கோடில்லா விளையாட்டு
[தொகு]விளையாட்டை கோட்டுக்கு வெளியே விளையாடினால் அது கோடில்லா விளையாட்டு. எ.கா.:-
குழு விளையாட்டு
[தொகு]விளையாடும் விளையாட்டை குழுவாக விளையாடினால் அது குழு விளையாட்டு. எ.கா.:-
- கிரிக்கெட்
- கைப்பந்தாட்டம்
- கூடைப்பந்து
- உதைபந்து
- வலைப் பந்தாட்டம்
- எறிபந்து
- ஓணப்பந்து விளையாட்டு
- கிட்டிப் புள்ளு
- கிளித்தட்டு
தனி விளையாட்டு
[தொகு]விளையாடும் விளையாட்டை தனியாக விளையாடினால் அது தனி விளையாட்டு. எ.கா.:-
- ஓட்டம்
- சாக்கு ஓட்டம்
- நீளம் பாய்தல்
- உயரம் பாய்தல்
- கோலூன்றிப்பாய்தல்
- சதுரங்கம்
- கரம்
- ஏணியும் பாம்பும்
- தாயம்
- மேசைப்பந்தாட்டம்
விளையாட்டு வகைகள்
[தொகு]விளையாட்டுகள் உடற்திறன் விளையாட்டுகள், பலகை விளையாட்டுகள், நிகழ்பட விளையாட்டுகள் எனப் பல வகைகளாக உள்ளன.
உடற்திறன் விளையாட்டுகள்
[தொகு]மனிதன் தனது உடல் திறன்களை திடமாக்கிகொள்ளும் பரிசோதித்துக்கொள்ளும் களங்களில் விளையாட்டு முக்கியமானது. அனேக விளையாட்டுகள் உடலினது வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை பயிற்சிக்கு உட்படுத்துகின்றன.
விளையாடுவதால் கிடைக்கும் பயன்கள்
[தொகு]விளையாடுவதால் மனிதன் உடல் நலத்தையும், மன நலத்தையும், சமூக நலத்தையும் பெறலாம். விளையாட்டுகளை விளையாடுவதால் ஒற்றுமை வளர்கின்றது. விளையாட்டுகளை விளையாடுவதால் ஒவ்வொருவரிடமும் தலைமைத்துவத்தன்மை வளர்கிறது.
பழைய கால விளையாட்டுக்கள்
[தொகு]இவை பண்டைய மக்கள் பொழுதுபோக்கிற்காக விளையாடப்பட்டன. இவ்விளையாட்டுகளை விளையாடுவதால் மக்கள் தமது கவலைகளை மறந்து இன்பத்தில் மூழ்குகின்றனர். அவர்கள் விளையாடிய விளையாட்டுகளில் சில.....
- அச்சுப்பூட்டு
- கிட்டிப் புள்ளு
- கோலி
- குச்சி விளையாட்டு
- பட்டம்
- பம்பரம்
- ஆனமானத் திரி
- கரணப்பந்து
- குதிரைக்குக் காணம் காட்டல்
- கொக்கு விளையாட்டு
- கோழிக்கால்
- தை தக்கா தை
- நடைவண்டி ஓட்டம்
- நொண்டி
- பச்சைக் குதிரை
- பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
- மந்தி ஓட்டம்
- மாட்டுக்கால் தாண்டல்
- மூக்குப்பிடி (துரத்திப் பிடி)
- அணில் பிள்ளை
- ஆடும் ஓநாயும்
- புலியும் ஆடும்
- நாயும் இறைச்சியும்
கணினி விளையாட்டுகள்
[தொகு]கணினியின் தொழில்நுட்பம் வளர்சியடைந்ததின் பயனாக, கணினி விளையாட்டுகளும் முன்னேறி வருகின்றன. 1990களின் இறுதியில், இணையம் மூலமாக விளையாடப்படும் விளையாட்டுகளும் தமது பங்கிற்கு வளர்ச்சியடைந்து வருகின்றன. தொடக்கத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் தானுந்து பந்தயத்தை விரும்பி விளையாடிய மக்கள், காலப்போக்கில் அதிரடி மற்றும் புலனாய்வு விளையாட்டுகளையும் விளையாட ஆரம்பித்தனர். இவ்விளையாட்டுகளை பெரும்பாலும் 12 முதல் 19 வயதுடைய சிறுவர் சிறுமியரே அதிகம் விரும்பி விளையாடுகின்றனர்.[5]
நன்மைகள்
[தொகு]- கணினி விளையாட்டுகளால் மன அழுத்தம் குறையும்.
- மேலும் ஒரு வலி நிவாரணியாகவும் செயல்படுகின்றது.
- இதன் மூலம் சிறுவர்களின் படைப்பாற்றல் மேம்படுகின்றது.
- தன்னிச்சியாக முடிவெடுக்கும் திறன் வளர்கிறது.
- குழந்தைகளின் தன்னம்பிக்கை மேலோங்குகின்றது.
- பிரச்சினைகளை தீர்க்கவும், அறிவாற்றலை பெருக்கவும் கற்றுக் கொடுக்கின்றது.
- மேலும் விளையாடுபவர்களை மகிழ்ச்சியாக வைத்துள்ளது.
தீமைகள்
[தொகு]- கணினி விளையாட்டுகள் உங்களை அடிமைப்படுத்தும்.
- உங்கள் பொறுமையை இழக்கச் செய்துவிடும்.
- வெளியுலகத்தை மறக்கடிக்கச் செய்யும்.
- உடலின் ஆரோக்கியம் குறையும்.
- கண் பார்வை குன்றிவிடும்.
- பொன்னான நேரத்தை வீணடிக்க கற்றுக்கொடுக்கும்.
- மற்ற விசயங்களில் கவனத்தை இழக்கச் செய்யும்.
விளையாட்டு தினவிழா
[தொகு]தமிழகத்திலுள்ள அனைத்து தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆண்டுதோறும் விளையாட்டு தினவிழா கொண்டாடப்படுகின்றது. விழாவிற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னர், மாணவர்களை அணிகள் விதமாக பிரிக்கப்பட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். விளையாட்டுக்களில் வெற்றிபெறும் முதல் மூன்று மாணவர்களுக்கு, விளையாட்டு தினவிழா அன்று பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்படும். மேலும், அதிக புள்ளிகள் அல்லது வெற்றிகளைப் பெற்ற அணிக்கு கேடயமும், பரிசுகளும் வழங்கப்படும். இந்நிகழ்வுகளால், சிறப்பாக விளையாடும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பும் நல்ல பயிற்சி களமும் அமையும். மேலும் அவர்களை மாநில அளவிலும், தேசிய அளவிலும் பங்குபெறும் வாய்ப்பாகவும் அமையும்.
விளையாட்டுகள்
[தொகு]முதன்மைக் கட்டுரை: விளையாட்டுகளின் பட்டியல்
இவற்றையும் பார்க்க
[தொகு]- மெய்வல்லுனர்
- தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சித் துறை
- தமிழீழ விளையாட்டுத்துறை
- தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்
மேலும் படிக்க
[தொகு]- Avedon, Elliot; Sutton-Smith, Brian, The Study of Games. (Philadelphia: Wiley, 1971), reprinted Krieger, 1979. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89874-045-2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Crawford, Chris (2003). Chris Crawford on Game Design. New Riders. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88134-117-7.
- ↑ Soubeyrand, Catherine (2000). "The Royal Game of Ur". The Game Cabinet. பார்க்கப்பட்ட நாள் 2008-10-05.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ Green, William (2008-06-19). "Big Game Hunter". 2008 Summer Journey (டைம்) இம் மூலத்தில் இருந்து 2013-08-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130822212135/http://www.time.com/time/specials/2007/article/0,28804,1815747_1815707_1815665,00.html. பார்த்த நாள்: 2008-10-05.
- ↑ "History of Games". MacGregor Historic Games. 2006. பார்க்கப்பட்ட நாள் 2008-10-05.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ "டெட்ரிஸ் வீடியோ கேம் விளையாடுகிறீர்களா? உங்களுக்காக ஒரு அதிர்ச்சித் தகவல்". Archived from the original on 2015-08-20. பார்க்கப்பட்ட நாள் 2015-08-18.