உள்ளடக்கத்துக்குச் செல்

முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதற்பக்கக் கட்டுரைகள்

கேரளம் என்பது இந்தியாவின் மலபார் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். 1956-ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் முறையைப் பின்பற்றி 1 நவம்பர் 1956 அன்று இது உருவாக்கப்பட்டது. கொச்சி, மலபார், தென் கன்னட மாவட்டம் மற்றும் திருவாங்கூரின் அப்போதைய பகுதிகளின் மலையாளம் பேசிய பகுதிகளை இணைத்து இது உருவாக்கப்பட்டது. இதன் பரப்பளவு 38,863 சதுர கிலோமீட்டர் ஆகும். பரப்பளவின் அடிப்படையில் 21வது மிகப் பெரிய இந்திய மாநிலமாக கேரளம் உள்ளது. இதற்கு வடக்கு மற்றும் வடகிழக்கே கருநாடகமும், கிழக்கு மற்றும் தெற்கே தமிழ்நாடும், மேற்கே இலட்சத்தீவுக் கடலும் எல்லைகளாக உள்ளன. மேலும்...


டேனியக் கோட்டை என்பது தமிழ்நாட்டின் தரங்கம்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு டென்மார்க் நாட்டவர்களின் கோட்டையாகும். இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு பொ.ஊ. 1620 இல் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையே டேனிஷ்காரர்களின் கோட்டைகளில் இரண்டாவது பெரிய கோட்டையாகும். இக்கோட்டை தரங்கம்பாடியோடு 1845 ஆண்டில் பிரித்தானியருக்கு விற்கப்பட்டது. அதன் பிறகு இந்த ஊரும் இக்கோட்டையும் தம் சிறப்பை இழந்தன. இந்தியா விடுதலையான 1947-க்குப் பின்னர் 1978 வரை இக்கோட்டை தமிழ்நாட்டு அரசால் ஆய்வு மாளிகையாகப் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு தமிழக தொல்லியல் துறையின் கட்டு்ப்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. மேலும்...

மேலும் கட்டுரைகள்...

உங்களுக்குத் தெரியுமா?

தொகுப்பு

செய்திகளில் இற்றைப்படுத்து

இன்றைய நாளில்...

ஏப்பிரல் 13:

மே. ரா. மீ. சுந்தரம் (பி. 1913· பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (பி. 1930· எஸ். பாலச்சந்தர் (இ. 1990)
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 12 ஏப்ரல் 14 ஏப்ரல் 15

பங்களிப்பாளர் அறிமுகம்

ராம்குமார் கல்யாணி என்பவர் திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் எனும் ஊரைச் சேர்ந்தவர். தற்போது கேரளம் திருவனந்தபுரத்தில் தனியார் பொது நிறுவனம் ஒன்றில் கொள்முதல் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2011 சூலை 28 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் அரசியல், தனிநபர்கள், சுற்றுலாத்துறை, திரைப்படங்கள், உளவியல், மெய்யியல் போன்ற தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

சிறப்புப் படம்

2020 இல் புவியில் தென்பட்ட நியோவைஸ் எனும் வால்வெள்ளிக் காட்சி. வால்வெள்ளிப் பனிக்கட்டியாலான சிறிய சூரியக் குடும்பப் பொருளாகும். இது சூரியனுக்கு நெருக்கமாகக் கடக்கும்போது சூடாகி வளிமங்களை வெளியிடும். இந்நிகழ்வு வளிமவீசல் அல்லது தாரை எனப்படுகிறது.

படம்: Palonitor'
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


  • சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய.
  • உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க.
  • தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள்.
  • ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட.
  • புதியன - விக்கிப்பீடியாவின் புதிய கட்டுரைகள்.

விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

விக்கிப்பீடியா மொழிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=2992950" இலிருந்து மீள்விக்கப்பட்டது