ஈகோஸ்ப்பொட்டாமி சமர் என்பது பண்டைய கிரேக்கத்தில் கிமு 405 இல் நடந்த ஒரு கடற்படை சமராகும். மேலும் இது பெலோபொன்னேசியப் போரின் கடைசி பெரிய போராகும். இந்தப் போரில், லைசாந்தரின் தலைமையிலான எசுபார்த்தன் கடற்படையானது ஏதெனியன் கடற்படையை அழித்தது. ஏதென்சு தானியங்களை இறக்குமதி செய்யவோ அல்லது கடலில் தடையின்றி தன் பேரரசின் பகுதிகளுடன் தொடர்பு கொள்ளவோ முடியாத நிலை ஏற்பட்டதால் இந்தப் போருடன் பெலோபொனிசியப் போர் முடிவுக்கு வந்தது. மேலும்...
1937 – நாங்கிங் படுகொலைகள்: சீனாவின் நாஞ்சிங் நகரம் சப்பானிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர் (படம்).
1972 – அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், அரிசன் சிமித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.
1982 – தென்மேற்கு ஏமனை 6.0 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 2,800 பேர் உயிரிழந்தனர், 1,500 பேர் காயமடைந்தனர்.
வியட்நாம் கிராமம் ஒன்றில் ஊதுபத்திக் கரைசலில் தோய்த்த பிறகு, ஊதுபத்திகள் உலர வைக்கப்படுகின்றன. ஊதுபத்தி பெரும்பாலும் இயற்கை பொருட்களாலும் சிறிது செயற்கை வாசனை நீர்மங்களாலும் சேர்ந்து செய்யப்பட்ட கலவையை ஆகும்.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,70,116 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.